மும்பை: பிரிட்டன் வெளியேற்றத்தின் வெளிப்பாடாகச் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 6% உயர்ந்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் சரிந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?
கச்சா எண்ணெய் விலை சரிவு..
இன்றைய கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தையில் அமெரிக்கப் பென்ச்மார்க் வெஸ்ட் டெக்சாஸ் எண்ணெய் ஆகஸ்ட் மாத டெலிவரி விலையில் 3.11 டாலர் அல்லது 6.21 சதவீதம் விலை சரிந்து 47.00 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
பிரென்ட் கச்சா எண்ணெய்
அதேபோல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 3.14 டாலர் அல்லது 6.17 சதவீதம் குறைந்து 47.77 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
ஏற்ற இறக்கங்கள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக அதிகளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால் இன்று ஐரோப்பிய-பிரிட்டன் வெளியேற்ப்புக்கான வாக்கெடுப்பு முடிவுகள் கச்சா எண்ணெய் விலையை அதிகளவில் பாதித்ததுள்ளது.
ஸ்காட்லாந்து மற்றும் வடஅயர்லாந்து
இந்நிலையில் ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், ஸ்காட்லாந்து மற்றும் வடஅயர்லாந்து ஆகிய நாடுகள் தற்போது பிரிட்டனில் தனியாகப் பிரிந்து தனி நாடாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
52 சதவீத மக்கள் ஆதரவு
ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காகச் செய்யப்பட்ட வாக்கெடுப்பில் சுமார் 52 சதவீத மக்கள் பிரிட்டன் நாட்டுக்குச் சாதமாக வாக்களித்துள்ளனர்.
சர்வதேச சந்தை பாதிப்பு
மேலும் அடுத்தச் சில வாரங்களுக்கு ஆசிய சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தை வர்த்தகத்தில் அதிகளவில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை
கச்சா எண்ணெய் விலை சரிவினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications