மும்பை: சர்வதேச சந்தையில் முன்னணி ஆடை விற்பனை நிறுவனமான யு.எஸ் போலோ, இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கி 5 வரும் மட்டும் ஆனா நிலையில் 1,000 கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் யு.எஸ் போலோ உடன் ஆடம்பரம் ஆடைப்பிரிவு வர்த்தக நிறுவனமான ZARAவும் வர்த்தகத்தைத் துவங்கியது. 2015ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த வர்த்தக நிலையில் 2 நிறுவனம் மிகவும் குறைந்த காலகட்டத்தில் 1000 கோடி ரூபாய் விற்பனை நிலையை எட்டியுள்ளது.

1000 கோடி ரூபாய் வர்த்தக நிலையை எட்ட லூயிஸ் பிலிப், வேன் ஹூசைன், பெட்டனன் ஆகிய நிறுவனங்கள் 10 வருடம் எட்டியது.
நுகர்வோர் விரும்பும் வடிவத்தில் சிறந்த பேஷன் ஆடைகளை, சரியான விலையில் சந்தையில் அறிமுகம் செய்யதன் மூலம் 5 வருடத்திற்குள்ளேயே 1,000 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய வர்த்தக நிலையை அடைந்துள்ளது என் அரவிந்த் ரீடைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜே சுரேஷ் தெரிவித்துள்ளார்.
யுஎஸ் போலோ மற்றும் அரவிந்த் ரீடைல் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக 2011ஆம் ஆண்டு முதல் கடை திறக்கப்பட்டது. தற்போது 230 கிளைகளுடன் இந்தியாவில் யுஎஸ் போலோ வர்த்தகம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications