பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு வர்த்தகத் துறையில் சேவை அளித்து வரும் குவெஸ் கார்ப் (Quess corp) நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காகச் செபியிடம் ஒப்புதல் பெற்றுச் செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டது.
400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்நிறுவனத்தின் ஐபிஓ திட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் அமோகமாக வரவேற்பை பெற்றது. கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பின் அறிவிக்கப்பட்ட ஐபிஓக்களில் எந்த நிறுவனமும் பெறாத வகையில் 144 மடங்கும் அதிகமாக முதலீட்டாகக் கோரப்பட்டது.

2000ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சன்கயா இன்போடெக் நிறுவனத்தின் 1.67 கோடி ரூபாய் ஐபிஓ முதலீட்டாளர்களால் 283.5 மடங்கும் அதிகமாகக் கோரப்பட்டது. இதன் பின் தற்போது குவெஸ் கார்ப் நிறுவனத்தின் 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ 144 மடங்கு அதிகமாகக் கோரப்பட்டுள்ளது.
குவெஸ் கார்ப் நிறுவனம் பங்குச்சந்தையில் சுமார் 1.02 பில்லியன் பங்குகளை வர்த்தகத்திற்காகத் திறந்து விடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications