டெல்லி: கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாகத் தொழில்நுட்ப துறையில் உலகில் தலைசிறந்து விளங்கும் அனைத்தும் நிறுவனங்களும் தற்போது இந்திய மண்ணில் தங்களது கடையை விரித்துள்ளது.
இதேக்காலகட்டத்தில் நிறுவனமும், அதன் நடைமுறையும் முழுமையாக மாறி தற்போது புதிய பரிமாணத்தை நோக்கி இந்திய சந்தை பயணித்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், கிரேட் பிளேசஸ் டு வொர்க் என்ற அமைப்பு இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த நிறுவனம் என்ற 2016ஆம் ஆண்டுக்கான பட்டத்தைக் கூகிள் நிறுவனத்திற்கு (Google India) கொடுத்துள்ளது.
கிரேட் பிளேசஸ் டு வொர்க்
2016ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த நிறுவனம் என்ற பட்டியலை தயாரிக்க இந்த அமைப்பு 800 நிறுவனங்களில் சுமார் 1,55,119 ஊழியர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளது. இந்தியாவில் இத்தகைய ஆய்வை கிரேட் பிளேசஸ் டு வொர்க் அமைப்பு கடந்த 13 வருடங்களாக நடத்தி வருகிறது.
கூகிள்
LinkedIn நிறுவனம் செய்த மற்றொரு ஆய்வில் கூகிள் நிறுவனம் 4வது இடத்தைப் பிடித்த நிலையில், கிரேட் பிளேசஸ் டு வொர்க் அமைப்பு நடத்திய 2016ஆம் ஆண்டுக்கான ஆய்வில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த வருடம் இந்நிறுவனத்தின் ஆய்வில் 2வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. LinkedIn நிறுவனம் செய்த ஆய்வைப் படிக்க கிளிக்.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்
கூகிள் நிறுவனத்தைத் தொடர்ந்து அமெரிக்க வங்கியியல் நிறுவனமான அமெரிக்கன் எக்ஸ்பிர்ஸ் இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 2 இடங்கள் முன்னேறி தற்போது 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
உஜ்வான் பைனான்சியல் சர்வீசஸ்
2015ஆம் ஆண்டு மதிப்பீட்டில் இருந்து 24 இடங்கள் முன்னேறி உஜ்வான் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிறுவனத்தில் ஊழியர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெலி பர்ஃபாமென்ஸ்
1978ஆம் ஆண்டு டேனியல் ஜூலியன் மூலம் துவங்கப்பட்ட இந்நிறுவனம் வாடிக்கையாளர் சேவை, தொழிற்நுட்ப சேவை, கால் சென்டர், கடன் வசூலித்தல், மற்றும் சமுக வலைத்தளச் சேவை எனப் பலதரப்பட்ட துறையில் பல சேவைகளை வழங்கி வருகிறது.
கிரேட் பிளேசஸ் டு வொர்க் நிறுவனத்தின் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 4வது இடத்தைப் படித்துள்ளது.
காட்ரிஜ் கன்ஸ்யூமர் பிராடெக் லிமிடெட்
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தக் காட்ரிஜ் கன்ஸ்யூமர் பிராடெக் லிமிடெட் என்னும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் இப்பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேரியாட் ஹோட்டல்ஸ் இந்தியா
இந்தியாவில் 5 நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிடி சேவைகளைப் பன்னாட்டு நிறுவனமான மேரியாட் ஹோட்டல்ஸ் இந்தியா 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
எஸ்ஏபி லேப்ஸ் இந்தியா
கிளைவுட், டேட்டாபேஸ் எனப் பல முக்கியத் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் எஸ்ஏபி லேப்ஸ் நிறுவனத்தின் இந்திய கிளை இப்பட்டியில் 7வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஓபராய் குரூப்
இந்தியாவில் ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிடி சந்தையில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த மோகன் சிங் ஓபராய் 1934 ஆம் ஆண்டு ஓபராய் ஹோட்டல்ஸ் மற்றும் ரெசார்ட்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது இந்நிறுவனம் ஓபராய் குரூப் தலைமையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 30க்கும் மேற்பட்ட ஆடம்பர ஹோட்டல்களைக் கொண்டுள்ள ஓபராய் குரூப் இப்பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
லெமன் டிரீ ஹோட்டல்ஸ்
எப்போது இல்லாத வகையில் கிரேட் பிளேசஸ் டு வொர்க் நிறுவனத்தின் பட்டியலில் டாப் 10 இடத்தில் 3 ஹோட்டல்கள் நிறுவனம் இடம்பெற்றுள்ளது.
இப்பட்டியலில் 3வது ஆக இடம்பெறும் ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிடி நிறுவனம் லெமன் டிரீ ஹோட்டல்ஸ்.
இன்டியூட்
பல துறைகளுக்கான மென்பொருள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈட்டுப்பட்டுள்ள இன்டியூட் நிறுவனம் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நிறுவனம் என்ற பட்டியலில் 10 வது இடத்தைப் பிடித்துள்ளது.
100 நிறுவனங்கள்
இந்தியாவில் வேலை செய்யச் சிறந்து விளங்கும் 100 நிறுவனங்களின் பட்டியலை காண இதைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications