புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திக்க வேண்டிய சவால்கள் இதுதான்..!

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜன் தனது 2வது பணிக்கால நீட்டிப்புக்கு மறுப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு புதிய கவர்னரை தேர்ந்தெடுக்கும் பணியைத் துவங்கியுள்ளது.

ரகுராம் ராஜன் இடத்திற்குத் தகுதியான மற்றும் திறமையான நபரைத் தேர்ந்தெடுக்கும் பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் கூடிய விரைவில் புதிய கவர்னர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சந்திக்க வேண்டிய முக்கியமான சவால்களை என்னவாக இருக்கும்..? இதைப் பற்றிய நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

எஃப்சிஎன்ஆர் டெபாசிட்

எஃப்சிஎன்ஆர் டெபாசிட்

வருகிற செப்டம்பர் மாதம் முதல் எஃப்சிஎன்ஆர் டெபாசிட் எனப்படும் Foreign Currency Non-Resident வைப்புகள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறத் துவங்கும், இதனைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்த டெப்பாசிட்கள் அனைத்தும் ஆகஸ்ட் 2013ஆம் ஆண்டு ரூபாய் மதிப்பு அதலபாதாளத்தைத் தொட்டபோது எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரகுராம் ராஜன் இந்த வெளியேற்றத்தின் அளவு 20 பில்லியன் டாலராக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் இந்திய சந்தையின் அன்னிய செலவானி அதிகளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நாணயக் கொள்கை குழு

நாணயக் கொள்கை குழு

புதிய கவர்னர் முதல் முறையாகப் புதிதாக அமைக்கப்பட உள்ள நாணயக் கொள்கை வடிவமைப்பில் இணைந்து செயல்பட உள்ளார். மத்திய அரசு இப்புதிய குழுவில் இருக்கும் தலைவர்களுக்குத் தனிப்பட்ட விதிமுறைகளை வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாக விளங்கும் பணப்புழக்கத்தை நிர்ணயம் செய்யும் நாணயக் கொள்கையைச் சிறப்பான முறையில் கையாள வேண்டிய இக்காட்டான சூழ்நிலையில் உள்ளார் புதிய கவர்னர்.

 

நிர்வாக எதிர்பார்ப்புகள்

நிர்வாக எதிர்பார்ப்புகள்

மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் வட்டி விகிதத்தில் தக்க மாற்றங்களைச் செய்யவேண்டும். அரசின் பரிந்துரையை மறுக்கும் வகையில் பல முறை வட்டிக் குறைப்பை அறிவிக்க மறுத்தார் ரகுராம் ராஜன். ஜனவரி 2015ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை 1.50% வரையிலான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் பரிந்துரையை 3.00%க்கும் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நாட்டின் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கப்பட்டது என்பது மத்திய அரசின் வாதம். இதனை ஏற்க மறுக்கிறார் ரகுராம் ராஜன். இதுவே அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம்.

 

வராக் கடன்

வராக் கடன்

ராஜன் கிளப்பிவிட்ட பொதுத்துறை வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வராக் கடன் பிரச்சனையை முழுமையாகத் தீர்க்க வேண்டிய கடமை புதிய கவர்னரை சார்ந்துள்ளது.

இதனால் புதிய கவர்னர் பதவியேற்றிய உடனேயே வங்கிகளில் மலையாய்க் குவிந்திருக்கும் வராக் கடனை இரும்புக் கரம் கொண்டு குறைக்க வேண்டும் இல்லை என்றால் இதுவே நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் விளங்கும்.

 

ஆர்பிஐ

ஆர்பிஐ

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், இயல்பான தன்னாட்சியை விட மத்திய வங்கியின் தன்னாட்சி மிகவும் முக்கியமானது. இது நடைமுறையில் உண்மையும் கூட, ஆனால் மத்திய அரசு தான் இதனைத் தொடந்து ஏற்க மறுக்கிறது.

டப்பூரி சுப்பாராவ் தான் முதன்முறையாக அரசு பதவியில் இருந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் நியமனம் செய்யப்பட்ட அனைவரும் ரிசர்வ் வங்கியின் பல்வேறு முக்கியப் பதவிகளில் இருந்தவர்கள். ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்படும்போது சுப்பாராவ் நிதிச் செயலாளராக இருந்தார்.

இதேபோல் இவருக்குப் பின் ரகுராம் ராஜன் தனது அனுபவம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்தில் அவருக்கும் இருந்த அறிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இவர்கள் இருவரின் நியமனத்தின் போதும் பலரும் பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர்.

 

2 பேர் போட்டி

2 பேர் போட்டி

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+