செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சி.. ஐஐடி-அக்சென்சர் கூட்டணியில் புதிய முயற்சி..!

மும்பை: இந்தியர்களுக்கு இன்று வரை எட்டாக்கனியாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence துறையில் ஆராய்ச்சி செய்ய ஐஐடி பாம்பே, ஐஐடி பாட்னா கல்லூரிகளுடன் முன்னணி மென்பொருள் நிறுவனமான அக்சென்சர் புதிய கூட்டணியை அமைத்துள்ளது.

இப்புதிய கூட்டணியின் முயற்சி இந்திய சந்தையில் செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சிக்கான பாதை சரிவர வகுக்கும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களில் இத்துறையில் இறங்கிய நிலையில் இப்புதிய கூட்டணியில் முயற்சிகள் எப்படிப்பட்டதாக இருக்கும்..?

ஏன் ஐஐடி..?

ஏன் ஐஐடி..?

நாட்டில் சிறந்த கல்லூரிகளில் முக்கியமானவை ஐஐடி பாம்பே, ஐஐடி பாட்னா. இக்கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு மிகப்பெரிய நிறுவனத்தில் பணியாற்ற திட்டமிட்டு இருப்பார்கள் அவர்களைக் கொண்டுபோய் உயர் பதவியில் வைக்கவும் நிறுவனங்கள் தயாராக இருக்கும். காரணம் இவர்களிடம் இருக்கும் திறமை மற்றும் அறிவு.

புதிய கூட்டணி

புதிய கூட்டணி

ஐஐடி மாணவர்களின் திறமையைச் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ளவே அக்சென்சர் இக்கூட்டணியை அமைத்துள்ளது. இது அக்சென்சர் என்னும் தனியார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபமாக இருந்தாலும் இந்திய சந்தையில் செயற்கை நுண்ணறிவு துறையின் ஆராய்ச்சிக்கு வகுக்கப்படும் வலிமையான பாதையாகவே நாம் பார்க்க வேண்டும்.

திட்டங்கள்

திட்டங்கள்

ஐஐடி-அக்சென்சர் கூட்டணி ஐடி சேவைகள், சமுகம் சார்ந்த விஷயங்களில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் பொறியாளர்களின் உதவியுடன் புதிய விஷயங்களைச் சாதிக்கத் திட்டமிட்டுள்ளது.

டெக்னாலஜி

டெக்னாலஜி

மேலும் ஆராய்ச்சியில் நேச்சுரல் லேங்வேஜ் பிராசசிங், மிஷின் லர்னிங், நியூரல் நெட்வொர்க், விர்ச்சுவல் ஏஜென்ட்ஸ், டீப் லர்னிங் ஆகியவற்றைப் பிரதானமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு துறையில் இருக்கும் பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் இக்கூட்டணி முடிவு செய்துள்ளனர்.

தீர்வுகள்

தீர்வுகள்

இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் ஊட்டச்சத்தின்மை மேம்படுத்தவும், மனித கடத்தல், வன்முறை, கொலை, கொள்ளை ஆகியவற்றைத் தடுக்கவும், காலநிலையைச் சிறப்பான முறையில் மேம்படுத்தவும், போன்ற மனிதனின் வாழ்வை மேம்படுத்தும் பல திட்டங்களில் ஈடுப்படக் இக்கூட்டணி முடிவு செய்துள்ளது.

பெங்களூரு

பெங்களூரு

இத்திட்டங்கள் அனைத்தும் பெங்களூரில் இருக்கும் அக்சென்சர் லேப் -இல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களின் முயற்சிகள் அனைத்தும் தொழிற்துறை சார்ந்ததாகவும், வர்த்தக நோக்குடன் செயல்பட்டு வருகிறது. அக்சென்சர் நிறுவனத்தைப் போல் இந்திய மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை 10இல் 1ஆவது செய்தால் நாட்டுக்கும் சரி, நாட்டு மக்களுக்கும் சரி நன்மை பயக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+