ஆக்ஸிஸ் வங்கியில் 74 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு செவ்வாய்க் கிழமை அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. ஜிஐசி, யூடிஐ, எல்ஐசி ஆக்கிய நிறுவனங்கள் இணைந்து 1994 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது ஆக்ஸிஸ் வங்கி.

இதுவரை ஆக்ஸிஸ் வங்கிக்கு 62 சதவீத அந்நிய முதலீட்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்த மத்திய அரசு தற்போது 74 சதவீதம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் நேரடி அந்நிய முதலீடாக ரூ. 13,000 கோடி வரை திரட்ட முடிவு செய்துள்ளது ஆக்ஸி வங்கி.
அதுமட்டும் இல்லாமல், இந்த அனுமதியினால் மூன்று வருடங்களில் 7,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புதியதாக ஆரம்பிக்கும் அனைத்துத் தனியார் வங்கிகளுக்கும் இந்த விதிமுறையைத் தளர்த்தியுள்ளது ஆர்பிஐ. எனவே இன்னும் பல புதிய தனியார் வங்கிகள் இந்தியாவில் துவங்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஆர்பிஐயின் இந்த அறிவிப்பினால் தனியார் வங்கிகளின் பங்குகள் விலை உயர்வது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications