அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் மல்லையாவின் பிரைவேட் ஜெட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிவிட்டு முறையாகச் செலுத்தாமல் லண்டனுக்கு ஒடிப்போயி ஒழிந்துகொண்டு இருக்கும் விஜய் மல்லையாவின் பிரைவேட் ஜெட் விமானத்தைச் சேவை வரித்துறை குறைந்தபட்ச விலைக்கு (அடிமாட்டு விலைக்கு) விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

 

லண்டனில் இருந்துகொண்டு கடன் தொகை செலுத்துவதாய் அவ்வப்போது எஸ்பிஐ வங்கிக்கு அறிக்கை விடுத்துவந்தாலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மல்லையா தெரிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்க மறுக்கிறது. சரி வாங்க பிரைவேட் ஜெட் விவகாரத்தைப் பார்ப்போம்.

சேவை வரித்துறை

சேவை வரித்துறை

விஜய் மல்லையா செலுத்த வேண்டிய வரித்தொகைக்காகச் சேவை வரித்துறை மல்லையாவின் ஆடம்பர பிரைவேட் ஜெட் விமானத்தை 2013ஆம் ஆண்டுக் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் வங்கிகள் மற்றும் பிற அரசு பிரிவுகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவை தொகை மற்றும் கடன் தொகைக்காக மத்திய அரசு மல்லையாவிற்குச் சொந்தமான சொத்துக்களைக் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கைப்பற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதனை முழுமையாக விற்பனை செய்ய முடிவு செய்தது. இதற்கு உச்ச நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

நிலுவை தொகை

நிலுவை தொகை

உச்ச நீதிமன்ற அனுமதியை அடுத்து சேவை வரித்துறைக்கு மல்லையா அளிக்க வேண்டிய 800 கோடி ரூபாய் தொகைக்காக மல்லையாவின் பிரைவேட் ஜெட் விமானத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது.

பிரைவேட் ஜெட் விற்பனை
 

பிரைவேட் ஜெட் விற்பனை

சேவை வரித்துறை இந்த ஆடம்பர விமானத்தை 152 கோடி ரூபாய் என்ற விலைக்கு நிர்ணயம் செய்து விற்பனை அறிவிப்பை அறிவித்தது. ஆனால் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்ததால் தற்போது இந்த விமானத்தைச் செய்ய அடிமாட்டு விலைக்கு விற்கச் சேவை வரித்துறை முடிவு செய்துள்ளது.

தோல்வி

தோல்வி

முதல் முயற்சியில் ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த அல்னா ஏரோ டிஸ்டிரிபியூஷன் பைனாசியல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் 1.09 கோடி ரூபாய் ஆர்டரை உதறித்தள்ளியது சேவை வரித்துறை. ஆனால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையோ 152 கோடி ரூபாய்.

2வது முறை

2வது முறை

இந்நிலையில் மும்பை நீதிமன்றம் மல்லையாவின் ஜெட் விமானத்தை விற்பனை செய்யும் இரண்டாவது முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி விற்பனை செய்யப்பட உள்ளது.

விலை குறைப்பு...

விலை குறைப்பு...

விமானத்திற்கான விலை நிர்ணயம் முடிவுகளைச் சேவை வரித்துறையின் கூட்டு விலை நிர்ணய குழுவே தீர்மானிக்கும். இந்நிலையில், 2வது முறை விற்பனையில் விமானத்தின் விலையைக் குறைக்கச் சேவை வரித்துறை முடிவு செய்துள்ளது.

இதனால் அதிகளவிலான போட்டி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விற்பனை அனைத்தும் ஏல முறையில் நடப்பட உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Service Tax Dept to auction Mallya jet at low reserve price

Having failed to get good valuation in the first attempt to auction the personal luxury plane of beleaguered businessman Vijay Mallya last week, the Service Tax Department is gearing up for the second attempt with a lower reserve price for bidders.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X