3,000 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்.. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலைக்கு ஏற்ப அதன் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்து வரும் சாம்சங், சியோமி, மோட்டோ, லெனோவோ ஏன் ஆப்பிள் நிறுவனம் கூடத் தற்போது இந்திய சந்தைக்கு ஏற்ப மலிவான விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை தற்போது 3,000 ரூபாய்க்குக் குறைந்துள்ளது. ஆம், அதிவேக இணைய வேகத்தைக் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியா சந்தையில் அதிகளவில் குறைந்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடெயில்

ரிலையன்ஸ் ரீடெயில்

சில மாதங்களுக்கு முன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடெயில், இந்திய சந்தையில் பிளேம் 3, பிளேம் 4, பிளேம் 5, மற்றும் பிளேம் 6 என 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கூடிய ஸ்மார்ட்போன்களை விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

 

 

மொபைல் சேவை

மொபைல் சேவை

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொபைல் சேவையை விரிவுபடுத்துவதற்காக ரீலையன்ஸ் ரீடெயில் லைப் நிறுவனத்தின் பிளேம் 3, பிளேம் 4, பிளேம் 5, மற்றும் பிளேம் 6 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலையை 25 சதவீதம் வரை குறைந்து வெறும் 2,999 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

போட்டி

போட்டி

இதனால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின், இந்த விலைக் குறைப்பால் புதிய போட்டி உருவாகும் எனத் தெரிகிறது. குறிப்பாக ஆடம்பர சந்தைக்குள் வரும் அதிக விலை மதிப்புக்கொண்ட போன்களின் விற்பனை குறையும்.

500 ரூபாய்க்கு மொபைல்

500 ரூபாய்க்கு மொபைல்

15 வருடத்திற்கு முன் இந்தியாவில் வெறும் 500 ரூபாய்க்கு மொபைல் போனை அறிமுகம் செய்து மொபைல் வர்த்தகத்தில் மிகப்பெரிய புரட்சியைக் கொண்டு வந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் தான்.

கடலை மிட்டாய்..

கடலை மிட்டாய்..

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் இந்த முடிவால் இந்தியாவில் அனைத்து நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் இனி ஸ்மார்ட்போன்கள் இந்திய மக்களுக்குக் கடலை மிட்டாய் விலையில் கிடைத்தாலும் ஆச்சரியம்படுவதற்கு இல்லை.

கடலைமிட்டாய் என்ற உடனே 1 ரூபாய்க்குக் கிடைக்குமா என்று நீங்கள் கேட்டால் கிடைக்கும். ஈஎம்ஐ முறையில் கிடைக்கும்.

 

15-20% சதவீத விலை குறைப்பு

15-20% சதவீத விலை குறைப்பு

இந்தியாவில் அடுத்த 1 மாதத்தில் அனைத்து ஸ்மார்ட்போன்களின் விலை 15-20% சதவீத விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைப் நிறுவனம்

லைப் நிறுவனம்

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் இந்த லைப் மொபைல் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் சிம் கார்டுடன் வழங்கப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

இந்நிலையில் லைப் நிறுவனத்தின் மாட்டல்களைக் குறைவான விலையில் கொடுக்க என்ன காரணமாக இருக்கும் என்பதை இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ் மற்றும் கார்பன் ஆகிய நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகிறது.

மார்ச் 2017

மார்ச் 2017

இந்நிஸையில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் இருக்கும் 40 சதவீத மொபைல் போன்கள் 1,600-6,600 ரூபாய் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4G smartphones under Rs 3,000 now a reality, much before expected

Prices of smartphones supporting 4G technology have broken the Rs 3,000 price barrier, benefiting users wanting high-speed internet access who may have been deterred by high entry prices.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X