இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் மந்தம்.. சென்னையில் மட்டும் உச்சம்..!

மும்பை: இந்திய பெரு நகரங்களில் வீட்டு மனைகளின் விலை 6 வருடங்களில் இல்லாத வகையில் மிகவும் குறைவான அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் கூறுகிறது.

2015-16ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டு, அதாவது ஜனவரி- மார்ச் காலகட்டங்களில் இந்தியாவில் வீட்டு மனைகளின் விலை சராசரியாக வெறும் 5.2 சதவீதம் வரையில் தான் உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் Housing Price Index கூறுகிறது. ஆனால் சென்னையில் கதையே வேறு..!

வீட்டு மனைகள்

வீட்டு மனைகள்

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. குறிப்பாகப் பெரு மற்றும் சிறு நகரங்களில் விட்டு மனை மற்றும் வணிகச் செய்வதற்கான இடங்களின் விலை அதிகரித்துள்ளது.

வாடகை

வாடகை

இதனால் வீட்டு மற்றும் வணிகக் கட்டிடங்களின் வாடகை அளவு அதிகரித்து மக்களை அதிகளவில் பாதித்தது நாம் மறுக்க முடியாது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

ஆனால் 2015-16ஆம் நிதியாண்டில் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது. இக்காலகட்டத்தில் வீட்டு மனைகளின் விலை குறைந்தது மட்டும் அல்லாமல் ஆண்டு முழுவதும் மிகவும் குறைவான வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி இந்தியாவில் வீட்டு மனைகளின் விலை குறித்து Housing Price Index கீழ் கடந்த 2010-11ஆம் ஆண்டு முதல் தகவல்களைச் சேர்த்து வருகிறது.

5.2 சதவீதம்

5.2 சதவீதம்

2014ஆம் நிதியாண்டில் வீட்டு மனைகளின் விலை உயர்வு சுமார் 17.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2015ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் இதன் அளவு வெறும் 5.2 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. இது கடந்த 5 காலாண்டுகளில் காணாத குறைவான விலை உயர்வு.

 வீட்டுமனை விலை குறியீடு

வீட்டுமனை விலை குறியீடு

நாட்டின் முக்கியமான 10 நகரங்களில் வீட்டுமனைகளின் சராசரி விலை கடந்த ஆண்டை விடவும் 2015-16ஆம் நிதியாண்டில் குறைந்துள்ளதாக Housing Price Index கூறுகிறது.

சென்னை டாப்பு...

சென்னை டாப்பு...

டாப் 10 நகரங்களில் வீட்டு மனைகளின் விலை உயர்வில் சென்னை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சென்னையில் 2015-16ஆம் நிதியாண்டில் 12.1 சதவீதம் வரை உயர்ந்து காணப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பெங்களூரு 7.2%, மும்பை 6.8%, டெல்லி 4.1% என்ற வகையில் விலை உயர்ந்துள்ளது.

ஆனால் கொல்கத்தாவில் மட்டும் 1.1 சதவீதம் அளவில் விலை குறைந்து காணப்படுகிறது.

 

சிறு நகரங்கள்

சிறு நகரங்கள்

பெரு நகரங்கள் அல்லாத சிறு நகரங்களில் அகமதாபாத் நகரில் 10.3% அளவில் விலை உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து லக்னோ 8.1% உயர்ந்துள்ளது. ஜெய்ப்பூர் 10.3%, கொச்சி 5.5%, மற்றும் கான்பூர் 1.7% வரையில் விலை குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+