மும்பை: ஸ்டீல் விலை 36 சதவீதம் உயர்ந்ததை அடுத்து கார்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ள, இந்த சூழ்நிலையிலும் இந்திய மக்கள் கார் மீது வைத்துள்ள தீராத காதல், கடந்த ஆறு மாதத்தில் கார்களின் புக்கிங் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டியுள்ளது.
இதனால் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை 10.33 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதத்தில் அதிகமான புக்கிங் செய்யப்பட்ட கார்களில் ரெனால்ட் குவிட் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனுடன் போட்டிபோட ஜாக்குவர் முதல் மாருதி சுசூகி வரை திண்டாடி வருகிறது.
அதிகமான புக்கிங் பெற்ற கார்கள்
டாடா மோட்டார்ஸ்-க்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர், மாருதி சுசூகி நிறுவனத்தின் நடுத்தர அளவிலான சியாஸ், ரெனால்ட் கிவிட் ஆகிய கார்கள் அதிகம் புக்கிங் செய்யப்பட்ட பட்டியலில் இணைந்துள்ளது.
அதிகாரப்பூரவ புக்கிங் எவ்வளவு
உலகளவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் F-PACE 2,91,556 கார்களுக்கு புக்கிங் பெற்றுள்ளதாகவும், மாருதி சுசூகி சியாஸ் மற்றும் சியாஸ் 1,00,272 கார் புக்கிங் பெற்றுள்ளதாகவும், ரெனால்ட் கிவிட் 2,08,690 கார்களுக்கு புக்கிங் நடந்துள்ளதாக, தத்தம் நிறுவனம் அறிவித்துள்ளன.
சென்ற வருடமும் இந்த வருடமும்
சென்ற வருடத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் 64 % சதவீதம் வரை பெற்றுள்ளது,ரெனால்ட் கிவிட் 38.2 சதவீதம் அதிகமாகப் பெற்றுள்ளது. இதில் கிவிட் கார் 1,50,000 ஆர்டர்களைப் வெளியீட்டின் போதே பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆறு மாதத்தில்...
கடந்த ஆறு மாதத்தில் ஜாகுவார் 61,651 கார்களை விற்றுள்ளதாகவும், மாருதி சுசூகி சியாஸ் 30,000 கார்களை விற்றுள்ளதாகவும், கிவிட் 61,895 கார்களை விற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளன.
அதிகரிக்கப்பட்ட விற்பனை
இந்த ஆறு மாதங்களில் ஐரோப்பாவில் 35 சதவீதம், இங்கிலாந்தில் 21 சதவீதம், வட அமெரிக்காவில் 21 சதவீதம், சைனாவில் 11 சதவீதம் என வெளிச்சந்தைகளில் 11 சதவீதம் வரை விற்பனையை அதிகரித்துள்ளது ஜாகுவார்.
சியாஸ் காரும் ஆப்பிரிகா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் சார்க் நாடுகளுக்கு 18,000 கார்களுக்கும் மேலாக ஏற்றுமதி செய்துள்ளது. கிவிட் கார்களும் மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
விலை
சியாஸ் கார் ரூ. 7.53 லட்சம் முதல் ரூ. 9.94 லட்சம் வரை விற்கப்படுகிறது. கிவிட் கார் ரூ. 2.57 லட்சம் முதல் ரூ. 3.53 லட்சம் வரை விற்கப்படுகிறது.
வேகமான விற்பனை
ஜாகுவார் கார்களில் அதிகமாக விற்பனை நடப்பது கார் F-PACE எக்ஸ்-ஈ மற்றும் எக்ஸ்.எஃப் கார்களே ஆகும். இந்த மாடல் கார் மட்டும் 9,500 கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் செடான் பிரிவில் அதிகபட்சமாக 40 சதவீதம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications