பிர்லா குழுமத்தின் துணை நிறுவனமான பிர்லா கார்ப்ரேஷன் வெள்ளிக் கிழைமை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்க்கு சொந்தமான சிமெண்ட் நிறுவனத்தை ரூ. 4,800 கோடிக்கு வாங்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாங்குவதற்கான காரணம்
இது குறித்து பிர்லா கார்ப்பரேஷன் தலைவர் ஹர்ஷ் லோதா கூறுகையில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்க்கு சொத்தமான சிமெண்ட் நிறுவனம் சிமெண்ட் விற்பனையில் நல்ல நிலையில் உள்ளது. இதுவே பிர்லா கார்ப்பரேஷன் நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சிமெண்ட் நிறுவனத்தை வாங்குவதற்கான காரணம் என்று கூறியுள்ளார்.
உற்பத்தி அதிகரிப்பு
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சிமெண்ட் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் 15.5 மெட்ரிக் டன் மேலும் உறப்பத்தி அதிகரிக்கும் எனவும் அரை கூறியுள்ளார்.
விரிவாக்கம்
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள உற்பத்தி ஆலைகளை வங்குவதாகவும், இதன் மூலம் பிர்லா கார்ப்பரேஷன் சிமெண்ட் உற்பத்தியில் பெறும் பங்கை வைக்கிறது, எனவே ரிலையன்ஸ் சேர்க்கப்படும் போது இது மேலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்றும் கூறினார்.
சணல் வணிகம்
சணல் வணிகத்தைப் பற்றி அவர் கூறியபோது கடப்பாடுடைய பேக்கேஜிங் மட்டங்களில் உள்ள அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கை ஏற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
பிர்லா சிமெண்ட் அசாம்
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சிமெண்ட் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் பிர்லா அதன் துணை நிறுவனமான பிர்லா சிமெண்ட் அசாம் முடப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications