மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லார்சன் அண்ட் டியூப்ரோ இன்ஃபோடெக் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள் திங்கள்(11 ஜூலை) முதல் ரூ.705 - 710 ஒரு பங்கு என்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் 1,200 கோடி வரை முதலீடுகளைப் பெற இயலும் என எல்அண்ட்டி மேம்படுத்துனர் மற்றும் நிறுவனர் எதிர்பார்க்கின்றனர்.
ஜூலை 13 வரை ஆஃபர்
சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஐபிஓ விலையிலிருந்து ஜூலை 13 ஆம் தேதி வரை ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.10 தள்ளுபடி பெறுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
ஐடி சேவையில் ஆறாம் இடம்
எல்அண்ட்டி இன்ஃபோடெக் ஐபிஓ பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பு நாம் இந்நிறுவனத்தைப் பற்றி சில விவரங்களை அறிந்து கொள்வது நல்லது.
ஐடி செவையில் இந்தியாவின் ஆறாவது பெரிய நிறுவனம் எல்அண்டி இன்ஃபோடெக். இது லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமும் கூட.
வாடிக்கையாளர்கள்
எல்அண்ட்டி இன்ஃபோடெக்கின் அதிகபட்ச வருமானத்தில் 69 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 17 சதவீதம் ஐரோப்பாவில் இருந்தும், 2 சதவீதம் வணிகத்தை இங்கிலாந்தில் இருந்தும் பேருகிறது. எனவே பிரிக்ஸிட் அறிவிப்பினால் எந்த ஒரு பாதிப்பும் இந்த நிறுவனத்தில் எழவில்லை.
வர்த்தகம் செய்யும் துறைகள்
வங்கி மற்றும் நிதி சேவைகள் (மொத்த வருவாய் 26.3 சதவிகிதம்), காப்பீடு (20.7 சதவீதம்), ஆற்றல் மற்றும் செயல்முறை (12.7 சதவீதம்), நுகர்வோர் தொகுக்கப்பட்ட உணவுகள், மருந்து உற்பத்தி மற்றும் சில்லறை (9.3 சதவீதம்), ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு பல்வேறு துறைகளில் செயல்பட்டு (6.2 சதவீதம்), உயர் தொழில் நுட்ப மற்றும் நுகர்வோர் மின்னணு (5.2 சதவீதம்), வாகன மற்றும் விண்வெளி (6.8 சதவீதம்) பொன்ற பல்வேறு துறைகளில் இந்நிறுவனம் செய்யப்படுகிறது.
வளர்ச்சி விகிதம்
2016 ஆம் நிதி ஆண்டில் இதுவரை ரூ.5,908.1 கோடி வருவாயை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இது 2015 ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 17.5 சதவீதம் அதிகமாகும்.
முக்கிய மேலாண்மை பணியாளர்கள்
செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜேலன் ஐடித் துறையில் 25 ஆண்டு அனுபவம் மிக்கவர்.
தலைமை நிதி அதிகாரி சோன்தாலியா கணக்காளராக 24 அனுபவன் உடையவர். தலைமை இயக்க அதிகாரி அப்தாப் உல்லா ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உடையவர்.
ஆஸ்த்தான முதலீட்டாளர்கள்
கிரிஸ் முதலீட்டு ஆலோசகர்கள் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஃபில் முதலீடுகள் (மொரிஷியஸ்) லிமிடெட், ஹெச்டிஎப்சி ட்ர்ஸ்ட்டி கோ லிமிடெட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் தொழில்நுட்ப நிதியம், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ரிலையன்ஸ் கேபிடல் ட்ர்ஸ்ட்டி கோ லிமிடெட், பிர்லா சன் லைப் ட்ர்ஸ்ட்டி கோ லிமிடட். லிமிடெட், மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் எண்டி எமர்ஜிங் ஃபண்ட் ஆகியோர் ஆஸ்த்தான முதலீட்டாளர்கள் ஆவர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications