ஹெச்-1பி விசா பெற 20 நிறுவனங்களுக்குத் தடை.. அமெரிக்க அரசு அதிரடி..!

டெல்லி: இந்தியர்கள் ஐடி ஊழியர்கள் சொர்க்க வாசலாகப் பார்க்கப்படும் ஹெச்-1பி விசா உலகளவில் தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவிலும், அமெரிக்க நிறுவனங்களிலும் இந்திய ஐடி பணியாளர்கள் நியமனம் செய்யக்கூடாது என்று பல தீர்மானங்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க அரசு தற்போது 20 நிறுவனங்களுக்கு ஹெச்-1பி விசா வழங்குவதற்குத் தடை விதித்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

கடந்த சில மாதங்களாக அமெரிக்க அரசு, ஹெச்-1பி மற்றும் எல்1 விசா வழங்குவதில் புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது, குறிப்பாக விசா கட்டணங்கள் இரட்டிப்பு.

இதுமட்டும் அல்லாமல் ஹெச்-1பி விசா பெற விருப்பும் விண்ணப்பதாரர்களின் சம்பள அளவு முதல் பல முக்கிய விதிமுறைகளை அமெரிக்க அரசு புதிதாக அறிவித்து அமலாக்கம் செய்துள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவன ஊழியர்களின் அமெரிக்கக் கனவு வெறும் கனவாகவே போய்விடும் அளவிற்குச் சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

தடை..

தடை..

இந்நிலையில் அமெரிக்க அரசு தடை விதித்துள்ள 20 நிறுவனங்களில் இந்தியா நிறுவனங்கள் உள்ளதா என்பதைத் தெரிந்துக்கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

 

 

அட்வான்ஸ்டு ப்ரொபஷ்னல் மார்கெட்டிக் இன்க்

அட்வான்ஸ்டு ப்ரொபஷ்னல் மார்கெட்டிக் இன்க்

நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள அட்வான்ஸ்டு ப்ரொபஷ்னல் மார்கெட்டிக் இன்க் நிறுவனத்திற்கு 30-9-2016 வரையில் ஹெச்-1பி மற்றும் எல்1 விசா பெற அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

அமேசிங் ஆப்பிள் அல்லது ப்ளூ பெல்

அமேசிங் ஆப்பிள் அல்லது ப்ளூ பெல்

நியூஜெர்சி மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு 24-02-2017 ஆம் ஆண்டு வரை ஹெச்-1பி மற்றும் எல்1 விசா பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தோனி இன்போர்மேஷன் டெக்னாலஜி இன்க்

அந்தோனி இன்போர்மேஷன் டெக்னாலஜி இன்க்

இந்நிறுவனத்தில் ஊழியர்கள் நலனைக் காக்க தவறிய காரணத்திற்காக அமெரிக்க அரசு அந்தோனி இன்போர்மேஷன் டெக்னாலஜி இன்க் நிறுவன பணியாளர்களுக்கு ஹெச்-1பி வழங்க 10-05-2017ஆண்டு வரை தடை விதித்துள்ளது.

ஆம்னிபஸ் எக்ஸ்பிரஸ்

ஆம்னிபஸ் எக்ஸ்பிரஸ்

டெக்சாஸ் மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமெரிக்கச் சந்தை முழுவதும் செயல்படும் இந்நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது..

கேர் வோல்டுவைட் இன்க்

கேர் வோல்டுவைட் இன்க்

இந்நிறுவனத்திற்ரு 2017ஆம் ஆண்டுச் செப்டம்பர் 23ஆம் வரை தடை.

குளோபல் டெலிகாம் கார்ப்

குளோபல் டெலிகாம் கார்ப்

கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்டர்சன் ஸ்வீட்வாட்டர்

கன்டர்சன் ஸ்வீட்வாட்டர்

அரிசோனா மாகாணத்தில் இந்நிறுவனத்திற்கு 2016ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரையில் விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

யூனிவெர்சல் என்டர்பிரைஸ் கார்பரேஷன்

யூனிவெர்சல் என்டர்பிரைஸ் கார்பரேஷன்

மேற்கு கலிபோர்னியாவில் இருக்கும் NCUE எனப்படும் யூனிவெர்சல் என்டர்பிரைஸ் கார்பரேஷன் நிறுவனத்திற்கு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

NYVA சாப்ட் இன்க்

NYVA சாப்ட் இன்க்

வெர்ஜினியா நகரத்தில் இருக்கும் இந்நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரியன் இன்ஜினியர்ஸ் இன்க்

ஒரியன் இன்ஜினியர்ஸ் இன்க்

இந்நிறுவனத்திற்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

பிரித்வி இன்போர்மேஷன் சொல்யூஷண் இண்டர்நேஷ்னல்

பிரித்வி இன்போர்மேஷன் சொல்யூஷண் இண்டர்நேஷ்னல்

வாஷிங்டன் நகரத்தில் இருக்கும் இந்நிறுவனத்திற்கு 2017 டிசம்பர் மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்எம்ஜேஎம் குருப் இன்க்

ஆர்எம்ஜேஎம் குருப் இன்க்

இந்நிறுவனமும் ஊழியர்களின் நலனைக் காக்காத காரணத்திற்காக விசா வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

ஸ்கோபஸ் கன்சல்டிங் குருப் இன்க்

ஸ்கோபஸ் கன்சல்டிங் குருப் இன்க்

கலிபோர்னியா நகரத்தில் இருக்கும் இந்நிறுவனத்திற்குப் புதிதாக ஹெச்-1பி மற்றும் எல்1 விசா வழங்க அமெரிக்க அரசு 2016 டிசம்பர் மாதம் வரை தடை விதித்துள்ளது.

சிர்சாய் இன்க்

சிர்சாய் இன்க்

வாஷிங்டன் நகரத்தில் இருக்கும் இந்நிறுவனத்திற்கு 2017 மே மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் ஏஜ்

ஸ்பேஸ் ஏஜ்

நியூஜெர்ஸி மாகணத்தில் இருக்கும் இந்நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெக்ஸீட் சொல்யூஷன்

டெக்ஸீட் சொல்யூஷன்

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டு இருந்த இந்நிறுவனம் தற்போது புதிய ஹெ1பி மற்றும் எல்1 பி விசா பெறுவதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறது.

டெம்ப் சொல்யூஷன்

டெம்ப் சொல்யூஷன்

இந்நிறுவனத்திற்கு 2017 பிப்ரவரி மாதம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

எக்செல் சொல்யூஷன் கார்ப்

எக்செல் சொல்யூஷன் கார்ப்

நியூஜெர்ஸி மாகாணத்தில் இருக்கும் இந்நிறுவனத்திற்கு 2016ஆம் ஆண்டுச் செபம்டம்பர் மாதம் வரையில் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

ரெடிஸ்ரா டெய்ரி லிமிடெட்

ரெடிஸ்ரா டெய்ரி லிமிடெட்

இப்பட்டியலில் அதிகக் காலம் தடை விதிக்கப்பட்ட 2 நிறுவனங்களில் ரெடிஸ்ரா டெய்ரி லிமிடெட் நிறுவனமும் ஒன்று.

டெக் வையர்

டெக் வையர்

2018ஆம் ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டு மற்றொரு நிறுவனம் டெக் வையர். இந்நிறுவனத்திற்கு 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+