விமானத்தில் பயணம் செய்பவர்களை அதிகரிக்கும் பொருட்டு ஏர் இந்தியா விமான சேவை தனது சேவைகள் மற்றும் கட்டணங்களில் நிறைய மாற்றங்கள் கொண்டுவருகிறது. இதன் ஒரு கட்டமாக கடைசி நிமிட டிக்கெட் விலைகளை ராஜ்தானி ரயில்களின் ஏசி 2-டையர் பயண கட்டணங்கள் அளவுக்குக் குறைக்க முடிவு செய்துள்ளது.
வழித்தடங்கள்
இதன் முதல் கட்டமாக தில்லி-மும்பை, தில்லி-சென்னை, தில்லி-கொல்கத்தா, தில்லி-பெங்களூரு என நான்கு வழித்தடங்களில் மட்டும் விமானம் கிளம்பும் நான்கு முன்பு மணிநேரத்திற்கு விளைகளைக் குறைக்க முன்வந்துள்ளது.
நிர்வாக இயக்குநர் அறிவிப்பு
இது குறித்து ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அசுவினி லொஹானி கூறுகையில் பயணிகளின் கடைசி நிமிடத்தில் அதிகமாகும் கட்டணத்தில் இருந்து விடுதலை அளிக்கவும், காலியாக இடங்களை நிரப்பவும் இந்த முடிவைச் செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
தற்போதைய ராஜ்தானி டிக்கெட் கட்டணங்கள்
மேலும், தற்போதைய தில்லி-மும்பை ராஜ்தானி ஏசி இரண்டாம்-அடுக்கு டிக்கெட் ரூ 2,870, தில்லி-சென்னை ரூ 3,905, தில்லி-கொல்கத்தா இரண்டாவது ஏசி ராஜ்தானி டிக்கெட் கட்டணம் ரூ 2,890, தில்லி-பெங்களூர் ராஜ்தானி ரூ 4.095 ஆகும்.
வருமானம் பெருக்கக்கூடியத் திட்டம்
ஏர் இந்தியா விமான சேவையில் 80% வழித்தடங்களில் 74% சதவீத டிக்கெட்டுகள் நிரம்பிவிடிகின்றன என்றும், எங்கள் குறிக்கோள் மிதம் உள்ள சீட்டுகளையும் நிரப்புவதே. இது போன்ற மலிவு விலையில் சீட்டுகளை நிரப்புவதன் மூலம் பயணிகளை அதிகரிக்க முடியும், அதுமட்டும் இல்லாமல் ஏர் இந்தியாவின் வருமானமும் பெருகும் என்று கூறியுள்ளார்.
தனியார் விமான நிறுவனங்கள்
கடைசி நிமிடங்களில் இரண்டு - மூன்று மடங்கு விலையை உயர்த்தும் தனியார் விமான நிறுவனங்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சென்ற மாதம்
சென்ற மாதம் ராஜ்தானி ரயில்களில் ட்க்கெட் உறுதிப்படுத்தப்படாத பயணிகளுக்கு, ஏசி முதல் வகுப்பு கட்டணங்களுக்கு நிகராக செலுத்தி பயணம் செய்யக்கூடிய குறைந்த காலத் திட்டத்தை செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications