சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்வு - இதுவே 2016-இன் உச்சம்
இன்று பங்குச் சந்தை தொடங்கிய உடனே சென்செக்ஸ் புள்ளிகள் வேகமாக உயர்ந்து 2016 புள்ளிகளை எட்டியது. சென்செக்ஸ் 450 புள்ளிகளும், நிஃப்டி 75 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் அஃப் பரோடா இரண்டு வங்கித் துறைகளில் 2.5 % வரை உயர்ந்துள்ளன.
ஜூன் மாதத்தின் உலகளாவிய விற்பனைக்குப் பிறகு டாடா மோட்டார்ஸ் 3.89 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் எல்அண்ட்டியின் துணை நிறுவனமான எல்அண்ட்டி இன்ஃபோடெக் ஐபிஓ பங்குகள் இன்று முதல் மும்பை பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட 4 பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19,173 கோடி சரிவடைந்து உள்ளது.


Click it and Unblock the Notifications