யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இருந்த போது அந்நிறுவனத்தின் ரூ.1,225 கோடியை முறைகேடாக தனக்கு சொந்தமான கிங்பிஷர் மற்றும் பார்முலா ஒன் குழுவுக்கு மாற்றியிருப்பதாக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் இந்திய பங்குச் சந்தையிடம் புகார் அளித்துள்ளது.
இதை மறுத்துள்ள மல்லையா, இந்தப் பரிமாற்றம் சட்டப்பூர்வமாக நடந்தது, அதுமட்டும் இல்லாமல் இயக்குநர் குழுவின் ஒப்புதலின் பெயரிலேயே நடந்தது. ஆனால் இப்போது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் காரணம் ஏதும் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளது, வேடிக்கையாகவும் உள்ளது என கூறியுள்ளார்.
சோதித்த பிறகே வாங்கப்பட்டது
2013 ஆம் அண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை டியாஜியோ நிறுவனம் வாங்கியது, மற்றும் பங்குகளை வாங்கும் முன் அனைத்து ஆவணங்களையும் இந்நிறுவனம் சோதித்தப் பிறகே வாங்கியது. இந்தக் குற்றச்சாட்டுக்களை இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆச்சரியமாகவும், துரதிருஷ்டவசமாகவும் உள்ளது.
எனக்கு ஏதும் தெரியாது
மேலும், இது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, இந்நிறுவனத்தை சோதனை செய்த இ அண்ட் ஒய் நிறுவனம் எனக்கு எந்தத் தகவலையும் அளிக்கவில்லை, எனவே எனக்கு இதைப்பற்றி ஏதும் தெரியாது மற்றும் விளக்கம் அளிக்கவும் முடியவில்லை.
பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமாக செய்யப்பட்டன
அனைத்துப் பரிமாற்றங்களும் சட்டப்பூர்வமாக செய்யப்பட்டு, அதனை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன வாரியம், பங்குதாரர்கள், ஆடிட்டர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறகே என்னால் அந்த நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற இயலும். எனவே அது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அவற்றுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது, இப்போது ஆச்சரியமூட்டும் மற்றும் துரதிருஷ்டமானது, என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் நெற்றுக்கடி
இந்தப் புகாரினால் மால்லையாவுக்கு ஏற்கனவே பண மோசடியில் பல வழக்குகளில் சிக்கி உள்ள மல்லையாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
முரண்பாடுகள்
மேலும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் அளித்துள்ள புகாரில் பல முரண்பாடுகள் இருப்பதாகக் கூரப்படுகிறது, அவர்கள் அளித்துள்ள புகாரில் இ அண்ட் ஒய் நிறுவனம் செய்த ஆய்வைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.
செபி விளக்கம்
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் அளித்துள்ள புகாரை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இந்த வழக்கைத் தீவிர மோசடிகளை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவிற்கு மாற்றப் பரிந்துரைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இப்போது இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள மல்லையாவின் பாஸ்போர்டை மத்திய அரசு முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications