9 வருடஙளில் வெற்றிகரமான ஐபிஓ: குவெஸ் கார்ப்
பங்குச் சந்தையில் ஆரம்பித்த நாள் முதல் 60 சதவீதம் உயர்ந்து ஒரு நட்சத்திர நிறுவனமாக வலம் வருகிறது குவெஸ் கார்ப். கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐபிஓ-இல் நுழைந்தது முதல் 145 மடங்காக உயர்ந்துள்ளது குவெஸ் கார்ப் பங்குகள் மட்டுமே.

நட்சத்திர பட்டியலில், டாக்டர் லால் பாத்லேப்ஸ், அல்கீம் லேப்ஸ் டீம்லீஸ் சர்வீசஸ், தைரோகேர் டெக் மற்றும் மிகச் சமீபத்தில் சேர்ந்த மகாநகர் கேஸ் போன்ற பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு திடமான லாபத்தை அளித்தது போல குவெஸ் கார்ப்பின் பெயரும் கூறப்படுகிறது.
குவெஸ் கார்ப் பங்கு தொடக்க விலை ரூ.307 இலிருந்து ரூ. 507.90க்கு இன்று உயர்ந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த இந்த நிறுவனம் இதுவரை ஐபிஓ வாயிலாக ரூ.400 முதலீட்டைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications