மும்பை: நாட்டின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்றான கோஏர் நிறுவனம் இந்திய சந்தையில் பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையிலும், பயணிகளின் எண்ணிக்கை உயர்விற்கு ஏற்ப சேவை விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் தனது வர்த்தகச் சேவையை விரிவாக்கம் செய்ய விரும்பும் கோஏர் தன்னை ஆயத்தம் செய்யும் வகையில் புதிதாக 72 ஏர்பஸ் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.

Farnborough இண்டர்நேஷ்னல் விமானக் கண்காட்சியில் கோஏர் விமான நிறுவனம் 7.7 பில்லியன் டாலர் மதிப்பிலான 72 ஏர்பஸ் ஏ320நியோ ரக விமானங்களை இந்நிறுவன ஆர்டர் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் கூடுதலான தள்ளுபடிகளைக் கோஏர் பெறும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது. காரணம் ஏர்பஸ் நிறுவனம் இந்த ஆர்டரை பல்க் ஆர்டராகப் பார்க்கிறது.

2011ஆம் ஆண்டு இந்நிறுவனம் அதேபோன்று 72 ஏர்பஸ் ஏ320நியோ ரக விமானங்களை ஆர்டர் செய்தது குறிப்பிடத்தக்கது. இது நாள் வரை கோஏர் நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 144 விமானங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications