இரண்டாம் நாளான நேற்று எல்அண்ட்டி இன்ஃபோடெக் ஐபிஓ பங்குகள் 3.58 மடங்காக உயர்ந்தன.
தேசிய பங்குச் சந்தையின் தரவின் படி தொடக்கத்தில் இருந்த 1,22,50,000 பங்குகள் தற்போது 4,38,05,100 பங்குகளாக ஐபிஓவில் உயர்ந்துள்ளது.
5.3 லட்சம் விண்ணப்பங்கள்
எல் அண்ட் டி இன்போடெக் பங்குகளில் முதலீடு செய்ய நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 63 சதவீதம் வரை உள்ளனர். இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்ய இதுவரை 5.3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனப் பங்குகள் முதல் நாள் முதலே நல்ல உயர்வைக் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளன.
ரூ.1,243 கோடியைத் திரட்ட முடிவு
லார்சன் & டூப்ரோ குழுமத்தின் ஒரு துணை நிறுவனமான லார்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் ஒரு ஐடி துறை நிறுவனமாகும், இதன் ஐபிஓவின் மூலமாக ரூ.1,243 கோடியைத் திரட்ட முடிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது
ரூ. 705-710 எனத் தொடங்கப்பட்ட இந்த ஆஃப்ர் விலை இன்றுடன் முடிவடைகிறது.
ஆஸ்தான முதலீட்டாளர்களின் முதலீடு
எல்அண்ட்டி இன்ஃபோடெக் தங்களுடைய ஆஸ்தான முதலீட்டாளர்களிடம் இருந்து ஒரு பங்கின் விலை ரூ. 710 என ரூ. 373 கோடியை வெள்ளிக்கிழமை பெற்றுள்ளது.
2015- 2016 ஒப்பீடு
2016 ஆம் நிதி ஆண்டில் இதுவரை ரூ.5,908.1 கோடி வருவாயை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இது 2015 ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 17.5 சதவீதம் அதிகமாகும்.
887 மில்லியன் டாலர்கள் வருவாய்
இந்தியாவின் ஆறாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான எல்அண்ட்டி இன்ஃபோடெக், 20,000 பணியாளர்களுடன் 887 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயுடன் செயல்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications