பெங்களுரூ: இன்போசிஸ் விஷால் சிக்கா நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு தளமான MANA பிரிவின் உயர் அதிகாரியான சாம்சன் டேவிட் ராஜினாமா செய்துள்ளார்.
விஷால் நியமனத்திற்குப் பின் 5 பெரும் தலைகள் வெளியேறியது இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாகக் குழுவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
புதிய தொழில்நுட்பம்
நாட்டில் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது அமெரிக்க நிறுவனங்களுக்கு இணையாக வங்கி மற்றும் இதர சேவை பிரிவுகளில் மட்டும் செயல்படக் கூடாது என முடிவு செய்து, கடந்த சில மாதங்களாகப் புதிய தொழில்நுட்பத்தில் இறங்கி வருகிறது.
இன்போசிஸ்
விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் தனது புதிய கொள்கையின் படி செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, குவான்டம் கம்பியூட்டிங், போன்ற பல தொழில்நுட்பத்தில் இறங்கியுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு பரிவின் மீது தனிக் கவனத்தைச் செலுத்தி வருகிறார் இன்போசிஸ் சீஇஓ விஷால் சிக்கா.
செயற்கை நுண்ணறிவு
இந்நிறுவனத்தின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இந்த MANA பிரிவில் சில மாதங்கள் முன்பே விஷால் சிக்காவின் நேரடி தலையீட்டின் பெயரில் இப்பிரிவின் ஐடி இன்ஃபரா தலைவராகச் சாம்சன் டேவிட் நியமிக்கப்பட்டார்.
காலாண்டு முடிவுகள்
சந்தையில் முதலீட்டாளர்கள், சக போட்டி நிறுவனங்கள் அனைத்தும் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் இந்நேரத்தில் சாம்சன் டேவிடின் ராஜினாமா MANA பிரிவைத் தாண்டி இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளைப் பாதிக்கும் அளவிற்கு மிகப்பெரிய பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது.
5 பெரும் தலைகள்
விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் 5வது பெரும் தலை சாம்சன் டேவிட். இதற்கு முன் இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி ராஜிவ் பன்சால், தற்போதைய எல்&டி இன்போடெக் சீஇஓ சஞ்சய் ஜவோநா, இன்போசிஸ் பிபிஓ தலவைர் கெளதம் தாக்கர், யெட்ஜ்வர்வ் நிறுவனத்தின் தலைவர் மைக்கில் ரே ஆகியோர் கடந்த 2 வருடத்தில் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனம் இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பு, தகவல் அளிக்க மறுக்கும் நிலையில் ஹெச்.பி நிறுவனம் சாம்சன் டேவிட்-இன் ராஜினாமா குறித்து நமக்குத் தகவல் அளித்துள்ளது.
இன்போசிஸ் - ஹெச்.பி நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தம்...?
சம்பந்தம்
இன்போசிஸ் - ஹெச்.பி நிறுவனத்திற்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் வர்த்தகப் போட்டி. ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சாம்சன் டேவிட் ஹெச்.பி நிறுவனத்தின் என்டர்பிரைசர்ஸ் சர்விசஸ் டெலிவரி வர்த்தகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது ஹெச்.பி நிர்வாகம். இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து சாம்சன் டேவிட்-இன் ராஜினாமா உறுதியாகியுள்ளது.
சாம்சன் டேவிட்
இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் MANA பிரிவு மட்டும் அல்லாலமல், கிளவுட், இன்ஃபாரஸ்டக்சர் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பிரிவுகளின் ஆண்டு வருமானம் 1 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 பில்லியன் டாலர் என்பது உண்மையில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆபத்து தான்.
வோல்டாஸ்
1990ஆம் ஆண்டில் வோல்டாஸ் நிறுவனத்தில் தனது பணியைத் துவங்கிய சாம்சன் டேவிட் 1992ஆம் ஆண்டு முதல் இன்று வரை இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் பயிற்சி மென்பொருள் பொறியாளராகச் சேர்ந்த சாம்சன் டேவிட் இந்நிறுவனத்தில் பல்வேறு முக்கியப் பணிகளில் பணியாற்றியுள்ளார்.
நாராயணா..!
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications