டெல்லி: இந்திய சந்தையில் கடந்த 18 மாதங்களாக ஏற்றுமதி அளவுகள் தொடர்ந்து குறைந்து வருவது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக விளங்கி வந்தது.
மத்திய அரசின் சில தளர்வுகள் மற்றும் சில முக்கியத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி நாட்டின் ஏற்றுமதி அளவுகளை ஜூன் மாதத்தில் 1.27 சதவீதம் வரை உயர்த்துள்ளது.
ஏற்றுமதி
இதனால் ஜூன் மாதத்தில் இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 22.57 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய பொருட்கள்
இக்காலகட்டத்தில் இன்ஜினியரிங், மருந்து பொருட்கள், விவசாயப் பொருட்கள், எலக்ட்ரானிக், கார்பெட் மற்றும் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி அளவு அதிகளவில் அதிகரித்துக் காணப்படுகிறது.
இறக்குமதி
2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இறக்குமதி அளவு 7.33 சதவீதம் குறைந்து 30.68 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதனால் கடந்த வருடம் 10.82 பில்லியன் டாலராக இருந்து வர்த்தகப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 8.11 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
தங்கம்
தங்க இறக்குமதியில் 38.54 சதவீதம் குறைந்துள்ளதே வர்த்தகப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
எண்ணெய் இறக்குமதி
கச்சா எண்ணெய் இறக்குமதி அளவுகளும் 16.472 சதவீதம் குறைந்து 7.25 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. எண்ணெய் இல்லாத பிற திரவப் பொருட்களின் இறக்குமதி அளவும் 4.11 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் இதன் இறக்குமதி மதிப்பு 23.43 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
முதல் காலாண்டு
ஏப்ரல்- ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பல்வேறு பொருட்களின் மதிப்பு 65.31 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 2.07 சதவீதம் குறைவாகும்.
காலாண்டு இறக்குமதி
இதேபோல் 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏப்ரல்- ஜூன் மாதம் காலத்தில் இறக்குமதி மதிப்பு 84.54 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது இது 14.53 சதவீதம் குறைவாகும்.
வர்த்தக பற்றாக்குறை
முதல் காலாண்டு வர்த்தகப் பற்றாக்குறையாக 2016ஆம் ஆண்டில் 19.23 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 32.22 பில்லியன் டாலராக இருந்து குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications