பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சந்தைக் கணிப்புகளை விடவும் குறைவான லாபத்தை அடைந்தது, இதனால் பங்குச்சந்தையில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 10 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்தது.
இந்நிலையில் இன்போசில், விப்ரோ, எச்சிஎல் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பிற்கு ஒப்பான நிலையை எட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2.46 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேக்காலத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு இரண்டு மடங்கு அதிகமாக அதாவது 4.81 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் விப்ரோ நிறுவனத்தின் மதிப்பு 1.37 லட்சம் கோடி, எச்சிஎல் நிறுவனம் 1.01 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதன் மூலம் இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் ஆகிய நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 4.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தை ஒப்பிடுகையில் வெறும் 3,000 கோடி ரூபாய் மட்டுமே வித்தியாசம்.
இந்த வித்தியாசம் கூட இன்போசிஸ் நிறுவனத்தினால் ஏற்பட்டது தான்.


Click it and Unblock the Notifications