அகமதாபாத்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் ரூ.70,000 கோடி கடனை பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருக்கும் நிறுவனங்கள் பட்டியலை ஜூன் 19 நாளை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது.
மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வழியுறுத்தியுள்ளது.
ஒரு நாள் போராட்டம்
அகில இந்திய வங்கி ஊழியர் சங்க செயலாளர் சி.எச் வெங்கடாசலம் கூறுகையில் ‘மக்கள் விரோத வங்கி சீர்திருத்தங்கள் மசோதாவை ஏற்ற முயற்சிக்கும் அரசை' எதிர்த்து ஜூலை 29 ஆம் தேதி 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இணைந்து ஒரு நாள் போராட்டம் நடத்தப் போவதாக கூறினார்.
7,000 பெரிய நிறுவனங்கள் ரூ. 70,000 கோடி வரை செலுத்தவில்லை
சில நோக்கங்களுக்காக கடனைப் பெற்று திருப்பிச் செலுத்த தவறியதும் இல்லாமல் அவற்றைப் பிற நோக்கங்களுக்காகத் தவறாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
இது போன்று 7,000 பெரிய நிறுவனங்கள் ரூ. 70,000 கோடி வரைப் பெற்று திருப்பி செலுத்தாமல் உள்ளனர் என்றும் கூறினார்.
அரசின் மென்மை போக்கு
இவர்கள் மீது அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முயலவில்லை. அரசு அவர்கள் மீது மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறது.
அதுமட்டும் அல்லாமல் அவர்கள் மீது அரசு ஏன் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யாமல் சிவில் வழக்குகளைப் பதிவு செய்கிறது என்பதை விளக்க வேண்டும்.
கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வழியுறுத்தல்
இது பொதுமக்கள் பணம், இது அரசாங்கமோ அல்லது வங்கியின் பணமோ அல்ல.
கடனைத் திருப்பி செலுத்தாதது கிரிமினல் குற்றமாக அறிவித்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களது சொத்துக்களை ஜப்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
விரைவு கடன் மீட்பு தீர்ப்பாயம் வேண்டும்
பெரிய கடன்களைச் செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து கடனை விரைவாகப் பெற விரைவு கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் அமைக்க வேண்டும்.
இது போன்ற கடன்களை வாரா கடனாக மாற்றி அமைப்பது மொசடி மற்றும் பொதுமக்களை ஏமாற்றுவது என்றும் கூறியுள்ளார்.
வங்கித் துறையில் தனியார்கள் நுழைய எதிர்ப்பு
வங்கித் துறையில் தனியார்கள் நுழைவதை எதிர்க்கும் இவர், இது போன்ற உள்நுழைவுகளை அனுமதிப்பது ஆபத்தானது மற்றும் பொதுத் துறை வங்கிகளைப் பலவீனப்படுத்தும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications