டெல்லி: பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் இருந்து ரூ.58,792 கோடி கடன் பெற்றுத் திருப்பி செலுத்தாத 5,600 நபர்கள் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) வெளியிட்டுள்ளது.
அபெக்ஸ் வங்கி ஊழியர்கள் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள பட்டியலின் படி பொதுத் துறை வங்கிகளில் மட்டும் ரூ. 28,775 கோடி தொகையை கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தப்படாமல் 3,192 கணக்கு உள்ளதாகக் கூறியுள்ளது.
நிறுவனங்கள் பட்டியல்
பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுத் திருப்பி செலுத்தாத முக்கிய நிறுவனங்கள் பட்டியலில் வின்சம் டைமண்ட்ஸ் & ஜூவல்லரி ரூ. 2,266 கோடிக்கும் மேலாகவும், ஃபார்எவர் பிரீஷியஸ் ஜூவல்லரி ரூ 1,000 கோடி, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ. 1,201 கோடி, டெக்கன் க்ரானிக்கல் ஹோல்டிங்ஸ் ரூ. 884 கோடி, இந்தியன் டெக்னோமேக் ரூ. 625 கோடி, ரேங்க் இண்டஸ்ட்ரிஸ் ரூ. 566 கோடி, ராசா டெக்ஸ்டைல்ஸ் ரூ. 694.59 கோடி, ரெய் அக்ரோ ரூ. 580 கோடி, எஸ் குமார்ஸ் நேஷன் வைட் ரூ. 598 கோடி, ஜெனித் பிர்லா (இந்தியா) ரூ.139 கோடி. ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.1,710 கோடி மற்றும் எல்க்ட்ரோதெர்ம் இந்தியா ரூ. 385 கோடி எனப் பட்டியல் நீள்கிறது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் 5 துணை வங்கிகளில் மட்டும் 1,546 பேர் ரூ. 18,576 கோடி வரை செலுத்தவில்லை.
தனியார் துறை வங்கிகளில் ரூ.10,250 கோடி, நிதி நிறுவனங்களில் ரூ. 728 கோடி, வெளிநாட்டு வங்கிகளில் ரூ. 463 கோடிகள் என வேண்டும் என்றே திருப்பி செலுத்தாதவர்கள் மட்டும் இல்லாமல் பிற கடன்களும் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றனர்.
தேசிய பொதுத் துறை வங்கிகள்
மிக அதிக அளவு வாராக் கடனைக் கொண்ட பெரிய தேசிய பொதுத் துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 698 கணக்குகளில் இருந்து ரூ. 9,445 கோடி, செண்ட்ரல் பேங்க் அஃப் இந்தியா மற்றும் ஓரியண்ட்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கிகளில் 639 மற்றும் 339 கணக்குகளில் இருந்து ரூ. 3,574 கோடி மற்றும் ரூ. 3,545 கோடி திருப்பி செலுத்தப்படாத தொகையாக உள்ளது.
தனியார் வங்கி துறை
தனியார் வங்கி துறைகளில், தீபக் பவேஜா, பீட்டா நெஃப்தால் மற்றும் மற்றவர்கள் மூலம் மட்டும் ரூ. 951,97 கோடி கோடக் மகேந்திரா வங்கியில் இருந்து அதிகபட்சமாக பெற்றுத் திருப்பி செலுத்த வில்லை.
கோடாக் மகேந்திரா வங்கியில் ரூ. 5,442 கோடி, ஆக்ஸிஸ் வங்கியில் 993 கோடி மற்றும் இண்டஸ்லேண்ட் வங்கியில் ரூ. 899 கோடி வாராக் கடனாக உள்ளன.
வெளிநாட்டு வங்கிகள்
வெளிநாட்டு வங்கிகளில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் ரூ. 301 கோடியும், தோகா வங்கியில் ரூ.72 கோடி, டச் வங்கியில் 31 கோடியும் வாராக் கடனாக உள்ளன.
மோசமான கடன்கள் மீது நடவடிக்கை இல்லை
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சி.எச்வெங்கடாசலம் கூறுகையில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவும், அரசாங்கமும் மோசமான கடன்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, அவர்களின் பெயர்களை வெளியிடுவதும் இல்லை.
பெரும் முதலாளிகளுக்கு மட்டும் சலுகை
கடன் பொதுமக்களின் பணத்தில் இருந்தே கொடுக்கப்படுகிறது. எனவே மக்களுக்கு யார் கடன் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று தெரிய வேண்டும். ஏழை மக்கள் கடன் வாங்கித் திருப்பி செலுத்தாத போது தொந்தரவு செய்யும் போது பெரும் முதலாளிகளுக்கு மட்டும் இப்படி சலுகை வழங்குவது ஏன்.
அது மட்டும் இல்லாமல் இது போன்று கடனைத் திருப்பி அளிக்காதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றும் கூறினார்.
2002-இல் இருந்து 10 மடங்காக உயர்வு
வங்கி ஊழியர் சங்கத்தைப் பொருத்த வரை பொதுத் துறை வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள மோசமான கடன் 2002-இல் இருந்து இதுவரை 10 மடங்காக உயர்ந்துள்ளதாகவும் ரூ.54,673 கோடியில் இருந்து 2016 ஆம் ஆண்டு ரூ.5,39,995 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications