சான் பிரான்சிஸ்கோ: முதல் காலாண்டு முடிவில் 3.1 பில்லியன் டாலர் லாபம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது மைக்ரோசாஃப்ட்.
சென்ற வருடம் மொபைல் ஃபோனில் முதலீடு செய்து பெறும் நட்டத்தை அடைந்த மைக்ரோசாஃப்ட் ஒரு வருடம் கழித்து மீண்டும் லாபத்தைப் பெற்றுள்ளது.
டிஜிட்டல் உருமாற்றங்கள்
தங்களது சொந்த டிஜிட்டல் உருமாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான இணைப்பு போன்றவை கடந்த வருடம் முக்கிய பங்கை வகித்துள்ளதாக சத்ய நாதெல்லா அறிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட நட்டத்தை சந்தித்து
கடந்த வருடத்தின் நான்காம் நிதி காலாண்டில் அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது நோக்கியா மொபைல் நிறுவனத்தை 7 பில்லியன் டாலருக்கு வாங்கியதால் கிட்டத்தட்ட நட்டத்தை சந்தித்து இருந்தோம்.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 22 டாலர் பில்லியனாக இருந்து வருமானம் 20.6 பில்லியன் டாலராக குறைந்தது.
3 சதவீத வளர்ச்சி
தலைமையில் ஏற்பட்ட மாற்றங்கள், ஒட்டுமொத்த முடிவுகள் மற்றும் கணிப்புகளை விட 3 சதவீதம் அதிகமாக வளர்ச்சியை அடைந்துள்ளது.
நேரடி வணிகம்
நாதெல்லாவின் கீழ் இயங்கி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது கணினி, மென்பொருள் துறைகளில் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இறங்கியது.
அது மட்டும் இல்லாமல் கிளவுட் சேவை, எக்ஸ் பாக்ஸ் மற்றும் சர்ஃபேஸ் டேப்ளெட்ஸ் போன்ற பங்களிப்புகளால் பிறரை நாடி வர்த்தகம் செய்து வந்ததைக் குறைக்க முயறசித்து வருகிறது.
புதிய வாய்ப்புகளை உருவாக்குதல்
வரும் நிதி ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் கிளவுட் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்களை அடையும், மேலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் நாதெல்லா கூறியுள்ளார்.
38 சதவீதம் உயர்வு
மைக்ரோசாஃப்ட் அதன் நிதி ஆண்டில் 38 சதவீதம் உயர்ந்து 16.8 பில்லியன் லாபம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications