பெங்களுரூ: நாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் 6.7 சதவீத லாப சரிவை சந்தித்து 2,059 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
கடந்த வருடம் இதேகாலக்கட்டத்தில் இந்நிறுவனம் சுமார் 2,207.4 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விப்ரோ
அபித் அலி நீமுச்வாலா தலைமையிலான விப்ரோ நிறுவனம் ஏப்ரல்-ஜூன் மாத காலாண்டில் லாபத்தில் 6.7 சதவீத சரிவடைந்துள்ளது, இதனால் கடந்த வருடம் 2,207.4 கோடி ரூபாயாக இருந்த லாபம் தற்போது 2,059 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
மொத்த வருமானம்
2016ஆம் நிதியாண்டின் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருமானத்தின் அளவு 10.7 சதவீதம் அளவில் உயர்ந்து 13,697.6 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாலர் வருவாய்
அதேபோல் டாலர் வருவாய் அளவுகளும் 2.6 சதவீதம் அதிகரித்து 1,931 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அடுத்தக் காலாண்டில் இதன் அளவு 1,950 மில்லியன் டாலர் வரை உயர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகவும் விப்ரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஊழியர்கள்
ஜூன் 30ஆம் தேதி முடிவில் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1.73 லட்சம்.
விடியோஸ் குருப்
மேலும் கடந்த டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்க விடியோஸ் குருப் நிறுவனத்தைக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்தது, ஆனால் தற்போது இம்முடிவு கைவிடப்பட்டதாக விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விடியோஸ் குருப் நிறுவன கைப்பற்றுதலுக்கான முடிவு நாள் முடிந்தும் சரியான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால் இந்நிறுவனத்தைக் கைப்பற்றும் 130 மில்லியன் டாலர் டீல் கைவிடப்பட்டது.
டிசிஎஸ்
என்.சந்திரசேகரன் தலைமை வகிக்கும் டிசிஎஸ் நிறுவனம் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சந்தைக் கணிப்புகளையும் தாண்டி 6,318 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது. இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 0.36 சதவீதம் குறைவாக இருந்தாலும், இதன் அளவு சந்தை கணிப்புகளை விட அதிகமாகும்.
2015ஆம் 4வது காலாண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 3 சதவீதம் உயர்ந்து 29,305 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாலர் வருவாய் அளவுகளில் இதன் அளவு 3.7 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் டாலர் வருவாய் மதிப்பு 4,362 மில்லியன் டாலராக உள்ளது.
இன்போசிஸ்
ஏப்ரல்-ஜூன் வரையிலான காலகட்டத்தில் விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் நிறுவனம் லாபத்தில் 4.5 சதவீதம் சரிந்து 3,436 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் இதன் வருவாய் 1.4 சதவீதம் குறைந்து 16,782 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் 29,000 கோடி ரூபாய்.
கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் அளவுகள் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐடி நிறுவனங்கள்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications