இண்டர்நெட் பயன்பாட்டில் இந்தியர்கள் அசத்தல்.. சீனாவுடன் முதல் இடத்திற்கு போட்டி..!

வளர்ந்து வரும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தகத்தினால் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இது தொடர்பாக புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 462.12 மில்லியனை எட்டியது என தெரிவித்தார்.

மார்ச் 2016 வரை

மார்ச் 2016 வரை

புதன்கிழமை தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா லோக் சபாவில் கூறுகையில் 2016 மார்ச் 31 வரை கணக்கிடுகையில் 34,26,54,750 நபர்களுக்கும் மேல் இண்டர்நெட் சேவையை பயன்படுத்துவதாக அறிவித்தார்.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

138 இணையதள சேவை வழங்குநரில் அதிகப்படியான பயனர்களாக 90.53 மில்லியன் பயனர்களுடன் பார்தி ஏர்டெல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வோடாஃபோன் மற்றும் ஐடியா

வோடாஃபோன் மற்றும் ஐடியா

ஏர்டெல் நெட்வொர்க்கினைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் வோடாஃபோன் 67.55 பயனர்களுடன் இரண்டாம் இடத்திலும், ஐடியா செல்லுலார் 40.53 மில்லியன் பயனர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

ரிலையஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 39 மில்லியன் பயனர்களுடன் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. ஏர்செல் உடன் இணைப்பு மற்றும் ரிலையன்ஸ் ஜியோ தொடக்கம் ஆகியவை நேர்ந்தால் இரண்டாம் இடத்தை ரிலையன்ஸ் எளிதாக அடைய வாய்ப்புள்ளது.

பிஎஸ்என்எல் மற்றும் ஏர்செல்

பிஎஸ்என்எல் மற்றும் ஏர்செல்

பிஎஸ்என்எல் 34 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஏர்செல் நிறுவனம் இன்னும் ரிலையன்ஸ் நெட்வோர்க்குடன் இணைக்கப்படாமல் 22.44 பயனர்களுடன் ஆறாம் இடத்தில் உள்ளனர்.

டாடா மற்றும் டெலினார்

டாடா மற்றும் டெலினார்

டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 44.03 பயனர்களுடனும், டெலினார் 13 மில்லியன் பயனர்களுடனும் கடைசி இரண்டு இடத்தைப் பிடித்துள்ளனர்.

சீனாவுடன் போட்டி

சீனாவுடன் போட்டி

சீனாவில் 721,434,547 இண்டர்நெட் பயனர்களும், இந்தியாவில் 462,124,989 இண்டர்நெட் பயனர்களும், அமிரிக்காவில் 286,942,362 பயனர்களும் இண்டர்நெட் பயன்படுத்திகிறனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+