பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சந்தைக் கணிப்புகளை விடவும் குறைவான லாபத்தை அடைந்தது ஒட்டுமொத்த ஐடி துறையையே அதிரவைத்தது. இந்த அதிர்வில் அதிகளவு பாதிப்படைந்தது இன்போசிஸ் நிர்வனர்கள் தான்.
காலாண்டு முடிவுகள் வெளியான தினத்தில் இன்போசிஸ் பங்குமதிப்பு 10 சதவீதம் வரை குறைந்தது. இதனால் விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் நிர்வாகக் குழுவில் அதிரிபுதிரி மாற்றங்கள் செய்யப்பட்டது. இதைப்பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
இன்போசிஸ்
விஷால் சிக்கா நியமனத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி, இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலர் இந்நிறுவனத்தை விட்டுத் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
இதனால் இந்நிறுவனத்தின் அஸ்திவாரமே ஆடிப்போய் உள்ளது. கடந்த 3 வருட இன்போசிஸ் வரலாற்றில் சுமார் 15க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளது.
காலாண்டு முடிவுகள்
2016ஆம் ஆண்டு முதல் காலாண்டு முடிவுகள் மற்றும் அதன் விளைவுகளைக் கண்ட இன்போசிஸ் நிறுவனர்கள், இதை இப்படியே விட்டா சரியாகாது என விஷால் சிக்கா மூலம் உயர் மட்ட நிர்வாகக் குழுவில் பல அதிகாரிகளை மாற்றினர்.
இதுமட்டும் அல்லாமல் சில முக்கிய அதிகாரிகளை நிறுவன இணைப்பு மற்றும் கைப்பற்றுதல் மற்றும் மிகப்பெரிய வர்த்தகத்தை அளிக்கும் டீல்-களைப் பெற வேண்டும் எனக் கடுமையான சூழல்களுக்குள் இன்போசிஸ் நிர்வாகம் தள்ளியுள்ளது.
டா டா...
இப்படி உயர்மட்ட நிர்வாகக் குழுவில் செய்யப்பட்ட மாற்றங்களை விரும்பாத முன்னாள் இன்போசிஸ் பிபிஓ பிரிவின் சீஇஓ அனுப் உபாதயா இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு முழுமையான வெளியேறியுள்ளார். இவரது பதிவியில் தற்போது அனந்த ராதாகிருஷணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிக்கலான சிக்கா
விஷால் நியமனத்திற்குப் பின் அதாவது ஆகஸ்ட் 2014க்குப் பின் அனுப் உபாதயா உடன் சேர்த்து சுமார் 6 பெரும் தலைகள் வெளியேறியது இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாகக் குழுவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு
இந்நிறுவனத்தின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இந்த MANA பிரிவில் சில மாதங்கள் முன்பே விஷால் சிக்காவின் நேரடி தலையீட்டின் பெயரில் இப்பிரிவின் ஐடி இன்ஃபரா தலைவராகச் சாம்சன் டேவிட் நியமிக்கப்பட்டார்.
5 பெரும் தலைகள்
விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் 5வது பெரும் தலை சாம்சன் டேவிட். இதற்கு முன் இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி ராஜிவ் பன்சால், தற்போதைய எல்&டி இன்போடெக் சீஇஓ சஞ்சய் ஜவோநா, இன்போசிஸ் பிபிஓ தலைவர் கெளதம் தாக்கர், யெட்ஜ்வர்வ் நிறுவனத்தின் தலைவர் மைக்கில் ரே ஆகியோர் கடந்த 2 வருடத்தில் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இணைப்பு மற்றும் கைப்பற்றுதல்
இன்போசிஸ் நிறுவனத்தின் இணைப்பு மற்றும் கைப்பற்றுதல் அதாவது ஐடி மொழியில் சொல்ல வேண்டும் என்றால் mergers and acquisitions பிரிவின் தலைவராகத் தீபக் படாகி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்னோவேஷன் பண்ட்
இந்நிலையில் 500 மில்லியன் டாலர் இன்போசிஸ் இன்னோவேஷன் பண்ட் பிரிவின் தலைவர் எஸ்ஏபி நிறுவனத்தில் இருந்து இன்போசிஸ்-க்கு தாவிய ரித்திகா சூரி, தற்போது இந்தப் பணியுடன் மிகப்பெரிய வர்த்தகத்தை(வருவாய்) அளிக்கும் டீல்-களைப் பெறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
சாம்சன் டேவிட்
இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் MANA பிரிவு மட்டும் அல்லாலமல், கிளவுட், இன்ஃபாரஸ்டக்சர் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளுக்குத் தலைவராக இருந்து சாம்சன் டேவிட் வெளியேறிய நிலையில் இப்பரிவின் புதிய தலைவராக நரசிம்ம ராவ் மனேபள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பிரிவுகளின் ஆண்டு வருமானம் 1 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
குளோபல் கன்சல்டிங்
இன்போசிஸ் நிறுவனத்தின் குளோபல் கன்சல்டிங் பிரிவின் தலைவர் சஞ்சய் புரேஹித் இடத்தில் புதிதாக ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சீஓஓ பிராவின் ராவ் உடன் இணைந்து மூலபாய விஷயங்களில் சஞ்சய் புரேஹித் பணியாற்ற உள்ளார்.
வருந்தும் விஷால் சிக்கா
இன்போசிஸ் நிறுவனம் சந்தித்த லாப சரிவு மற்றும் நிர்வாகத்தில் ஏற்படுத்த உள்ள மாற்றங்களைக் கண்டு தான் மிகவும் வருந்துவதாக 1.97 லட்ச ஊழியர்களுக்குக் கடிதம் அனுப்பினார் விஷால் சிக்கா.
மனி மனி..
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications