டெல்லி: ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் செய்யப்பட்டும் வர்த்தகத்திற்கு வரிச் சலுகை பெற்ற சுமார் 728 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்திருந்தது.
இதில் வெறும் 16 நிறுவனங்களுக்கு மட்டும் தான் வரிச் சலுகை பெற அடிப்படைத் தகுதி உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜூலை 18ஆம் தேதி வரை 728 நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தது, இந்நிறுவனங்களுக்குக் குறித்து முழுமையான ஆய்வு செய்யப்பட்டதில் 180 நிறுவனங்கள் மட்டும் தான் ஸ்டார்ட்-அப் நிறுவனம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்காகத் தனியாக உருவாக்கப்பட்ட தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் அமைப்பு இப்புள்ளி விபரங்களை அளித்துள்ளது.
அதிலும் ஏப்ரல் 1, 2016க்குப் பின் துவங்கப்பட்ட நிறுவனங்களில் 16 நிறுவனங்கள் மட்டும் வரிச் சலுகை பெறத் தகுதியுடையதாக உள்ளது. இதில் 3 நிறுவனங்களை மட்டும் அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், பேச்சு வார்த்தைகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் இறுதிக்கட்ட இடத்தை அடையும் நிறுவனங்கள் ஏப்ரல் 1, 2016 முதல் மார்ச் 31, 2019ஆம் ஆண்டுக் காலம் வரையிலான 5 வருடத்தில் முதல் 3 வருடத்திற்கு வரிச் சலுகை பெறும்.
இச்சலுகையைப் பெற நிறுவனங்கள் மத்திய அமைச்சகத்திடம் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். இதற்காகவே நிறுவனங்கள் தற்போது அரசுடன் போராடி வருகிறது.


Click it and Unblock the Notifications