லண்டன்: என்னிடம் மறைக்க ஏதும் இல்லை, இந்திய அதிகாரிகளுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் லண்டன் வந்து விசாரித்துக் கொள்ளலாம் என்று விஜய மல்லையா ஆட்டோஸ்போர்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அந்தப் பத்திரிக்கையில் விஜய மல்லையாவிடன் மறைக்க ஏதும் இல்லை, எதற்கும் தயார் நிலையில் உள்ளார். அவருக்கு எதிராக இந்திய அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுகின்றனர் என்று அவர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
இது பற்றி கூற எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவர்கள் ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படும் போது என்னால் என்ன செய்ய இயலும் என்று அந்தப் பத்திரிக்கையில் கூறியுள்ளார். இந்திய அதிகாரிகளுக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிர்வாகிகள் பலருடன் தொடர்பில் உள்ளனர், மேலும் அவர்களுக்கு அனைத்து அவனங்களையும் பார்க்கும் அனுமதியும் உள்ளது. அவர்களுக்கு என்னை விசாரிக்க வேண்டும் என்றால் லண்டன் வரட்டும், ரேடியோ கான்ஃப்ரன்சில் கேள்வி கேட்கட்டும், மின்னஞ்சல் வாயிலாகக் கேள்விகள் அனுப்பட்டும். என்னிடம் மறைக்க ஏதும் இல்லை என்று மல்லையா கூறியுள்ளார். அவர்கள் என் மீது கைது உத்தரவு பிறப்பிப்பது, பாஸ்போர்ட்டை முடக்குவது என்று முரண்பாடாக நடந்து கொண்டால் அவர்களுடைய நோக்கம் என்ன, அவர்கள் அழைக்கும் விசாரணைக்குச் செல்ல எனக்கு நம்பிக்கை எப்படி வரும் மேலும் அவர் கூறுகையில் என்னிடம் முதல் முறையாக 1985 ஆம் ஆண்டு அதிகாரிகள் இரண்டு வருடமாக விசாரித்தனர், கடைசியாக அவர்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை, பின்னர் நான் முற்றிலும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டேன். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் விசாரணை அமைப்புகள் அரசியல் கருவிகளாக உள்ளன எனவே தான் அவர்களுக்கு அங்குச் சென்று பதி அளிப்பதைத் தவிர்த்து வருகிறேன், எனக்கு இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். ரூ.9,000 கோடி மொசடி செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, சென்ற 2016, மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் தலைமறைவாக மல்லையா உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேறு வழி தெரியவில்லை
நிர்வாகிகள் பலருடன் தொடர்பில் உள்ளனர்
லண்டன் வரட்டும்
அவர்களுடைய நோக்கம் என்ன..?
1985 ஆம் ஆண்டு
அரசியல் கருவிகளாக உள்ளன
ரூ.9,000 கோடி மொசடி


Click it and Unblock the Notifications