தனியார் நிறுவனங்களை ஓரம்கட்டி முதல் இடத்தைப் பிடித்த அரசு நிறுவனம்: ஃபார்ட்யூன் 500

உலக அளவில் அதிக வருவாய் ஈட்டும் முதல் 500 நிறுவனங்கள் பட்டியலை ஃபார்ட்யூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஃபார்ட்யூன் 500 பட்டியலில் இருக்கின்ற ஒரு சிறப்பு என்னவென்றால் இது பொதுத் துறை நிறுவனம் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் என இரண்டையும் சேர்த்து பட்டியலிடும்.

இதற்கு முன்பு இது போல இந்தியாவில் சிறந்த நிறுவனங்கள், உலகளவில் சிறந்த நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டது இந்தப் பத்திரிக்கை.

தற்போது 2016-இல் உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலை இந்தப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்தும் ஏழு நிறுவனங்கள் உள்ளன.

அவை எந்த நிறுவனங்கள் என்பதைப் பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.

இந்தியன் ஆயில்

இந்தியன் ஆயில்

உலகளவில் 161 வது இடமும், இந்திய நிறுவனங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிறுவனம் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் மட்டும் மொத்தம் 54.7 பில்லியன் டாலர்கள் வருவாய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரிலையன்ஸ் நிறுவனம்

ரிலையன்ஸ் நிறுவனம்

சென்ற வருடம் 158 ஆம் இடத்தில் இருந்த முக்கேஷ் அம்பாணியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த வருடம் 215 ஆம் இடத்திற்குப் பின் தங்கியுள்ளது.

ஃபார்ட்யூன் 500 பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய நிறுவனங்கள்

ஃபார்ட்யூன் 500 பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய நிறுவனங்கள்

சென்ற வருடம் 260 வது இடத்தில் இருந்த எஸ்பிஐ நிறுவனம் இந்த வருடம் 232 வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

சென்ற வருடம் 226 ஆம் இடத்தில் இருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த வருடம் 254 ஆம் இடத்திற்குப் பின் தங்கியுள்ளது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

சென்ற வருடம் 367 வது இடத்தில் இருந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இந்த வருடம் 327 வது இடத்தைப் பிடித்துள்ளது.

பாரத் பெட்ரோலியம்

பாரத் பெட்ரோலியம்

சென்ற வருடம் 280வது இடத்தில் இருந்த பாரத் பெட்ரோலியம் இந்த வருடம் மிகவும் பின்தங்கி 358 வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜெம்ஸ் அண்ட் ஜூவெல்லரி

ஜெம்ஸ் அண்ட் ஜூவெல்லரி

சென்ற வருடம் பட்டியலில் இருந்த ஒஎன்ஜிசி நிறுவனத்தின் இடத்தை ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஜெம்ஸ் அண்ட் ஜூவெல்லரி ஃபர்ம் நிறுவனம் பிடித்துள்ளது.

முதல் முறையாகப் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த நிறுவனம் 423 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

உலகின் முதலிடம் யாருக்கு?

உலகின் முதலிடம் யாருக்கு?

சில்லறை வணிகத்தில் மாபெரும் நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் 482,130 மில்லியன் டாலர் வருவாய் பெற்று உலகின் முதல் இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஐந்து இடத்தைப் பிடித்த நிறுவனங்கள்

அடுத்த ஐந்து இடத்தைப் பிடித்த நிறுவனங்கள்

உலகளவில் அடுத்த ஐந்து இடத்தை பிடித்த நிறுவனங்கள் ஸ்டேட் கிரிட் (இரண்டாவது, $ 329.601 மில்லியன்), சீன தேசிய பெட்ரோலியம் (மூன்றாவது, $ 299.271 மில்லியன்), சினோபெக் குழு (4 வது, $ 294.344 மில்லியன்), ராயல் டச்சு ஷெல் (5 வது, $272.156 மில்லியன்), எக்ஸான் மொபில் (6 வது, $246.204 மில்லியன்) ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+