பான் எண் குறிப்பிடாமல் பண பரிவர்த்தனை செய்த 7 லட்சம் பேருக்கு நோட்டிஸ்

கருப்புப் பணம் மற்றும் வரி செலுத்தாதவர்களை கண்டறியும் வகையில் பான் எண்ணைக் குறிப்பிடாமல் பண பரிவர்த்தனை செய்ததாக ஏழு லட்சம் பேருக்கு நோட்டிஸ் அனுப்பப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பத்து இலக்க தனிப்பட்ட நிரந்தர பான் எண் ஒவ்வொரு தனிநபர்களுக்கும் வழங்குவது வழக்கம். இந்த எண்ணைப் பயன்படுத்தி வருமான வரித் துறையினருக்கு தனிநபர்களின் பண வர்த்தனை மற்றும் நிதி நிலைகளைக் கண்காணிக்க முடியும்.

ரூ. 50,000-க்கும் மேல்

ரூ. 50,000-க்கும் மேல்

வங்கியில் ரூ. 50,000-க்கும் மேலாக பண பரிவர்த்தனை செய்தால் பான் எண் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால் பான் எண் குறிப்பிடாமல் சென்ற நிதி ஆண்டில் ஏழு லட்சம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூரப்படுகிறது.

புதிய வசதி

புதிய வசதி

பான் எண் குறிப்பிடாமல் பரிவர்த்தனை செய்தவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் இந்தக் கடிதம் பெறும் நபர்களின் வசதிக்காக இணைய வழி வறிதாக்கல் செய்யும் ஈ-ஃபில்லிங்(e-filling) இணையதளத்தில் ஒரு புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

தனித்த பரிவர்த்தனை வரிசை எண்

தனித்த பரிவர்த்தனை வரிசை எண்

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தனித்த பரிவர்த்தனை வரிசை எண் பயன்படுத்தி பான் எண் குறிப்பிடாமல் செய்த பரிவர்த்தனையை பான் எண் சேர்த்து இணைக்க இயலும்.

மறுப்பு தெரிவிக்கலாம்

மறுப்பு தெரிவிக்கலாம்

அதே போல மின்னணு முறையில் அவர்களுடைய சொந்த பரிவர்த்தனையாக இல்லாமல் போனால் மறுப்பும் தெரிவிக்கலாம்.

கூடுதல் விளக்கம்

கூடுதல் விளக்கம்

இது போன்ற 10 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனை செய்த மற்றும் 30 லட்சத்துக்கும் மேலான விலையில் சொத்து வாங்கியவர்களிடமும் கூடுதல் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படவுள்ளது என தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற குழு

உச்ச நீதிமன்ற குழு

அன்மையில் உச்ச நீதிமன்றம் அமைத்த குழு ஒன்று ரூ.3 லட்சத்துக்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பினாமி பரிவர்த்தனை

பினாமி பரிவர்த்தனை

இது குறித்த கேபினெட் குழுவில் பினாமி பரிவர்த்தனைக்கான கோப்பில் உள்ள குழப்பத்திற்கான விவாதிப்பு முடிந்தவுடன் முடுவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+