101 சதவீத லாப உயர்வில் அசோக் லைலேண்ட்..!
சென்னை: கனரக வாகன உற்பத்தியில் இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமாக இருக்கும் ஹிந்துஜா குழுமத்தின் தலைமையில் கீழுள்ள அசோக் லைலேண்ட் ஜூலை 30 தேதி முடிந்த காலாண்டில் மொத்த லாபத்தில் 101 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது.
கடந்த வருடத்தை விட ஜூன் மாத காலாண்டில் 10 சதவீத விற்பனை அதிகரித்தது மொத்த லாபம் 144.50 கோடி ரூபாயில் இருந்து 2016ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 290.78 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவும் 10 சதவீதம் அதிகரித்து 3,883.13 கோடி ரூபாய் உயர்ந்து 4,258.84 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அசோக் லைலேண்ட் நாணய பரிமாற்றத்தின் மூலம் நீண்ட காலக் கடனாக 49.67 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் MHCV பிரிவில் சுமார் 22,061 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications