ரூ. 9000 கோடி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவின் 8 கார்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவாலில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் வீட்டை ஏலம் விடுவதில் அடைந்த தோல்வியை அடுத்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் SBICAP ட்ரஸ்ட்டி கம்பெனி லிமிடெட் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் பயன்பாட்டிற்காக வைத்திருந்த எட்டு கார்களை ஏலம் விடுவதாக முடிவு செய்துள்ளனர்.
எட்டு கார்களின் விவரங்கள்
டொயோட்டா இன்னோவா ரூ 2.50 லட்சம், டொயோட்டா ரூ 2.20 லட்சம், ஹோண்டா சிட்டி ZX ரூ .2 லட்சம், ஹோண்டா சிட்டி இஎக்ஸ்ஐ ரூ .2 லட்சம், ஹோண்டா சிவிக் ரூ 1.80 லட்சம், ஹூண்டாய் எலெண்ட்ரா ரூ 1.30 லட்சம், ஹோண்டா சிட்டி இஎக்ஸ்ஐ: ரூ. 1 லட்சம், ஹூண்டாய் ஜிப் இயக்கி ரூ 90,000 என கார்களை ஏலம் விடுவதன் மூலமாக 13.70 லட்சம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
ஏலம் விடப்படும் நாள்
மல்லையா திருப்பி செலுத்த வேண்டிய ரூ. 6,963 கோடியில் ரூ.13.70 லட்சத்தை மீட்பதற்கான இந்த ஏலம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
ஏலத்தில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக ரூ.2000 செலுத்த வேண்டும், பின்னர் ஏலம் எடுப்பவர் மேற்கொள்ள உள்ள ஏலத்தில் 10 சதவீதத்தை டெப்பாசிட் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
ஏலத்தில் பங்கேற்பவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 23, 2016 வரை ஆகும். இந்த கார்களை ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்து கொள்ளலாம்
வங்கி அமைப்புகளின் போராட்டம்
9,000 கோடி ரூபாய் வங்கிக்கடனைத் திருப்பித் தராமல் நாட்டை விட்டு ஓடிய நிலையில் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு அளித்த கடனை திரும்பி பெரும் நோக்கில் வங்கி அமைப்புகள் ஒரு புறம் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications