மும்பை: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் பயணிகளுக்கான இன்சூரன்ஸ் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் சேவையை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
பயணிகளுக்கான இன்சுரன்ஸ்
பயணிகளுக்கான இன்சுரன்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும், அதற்காக மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஐஆர்சிடிசி தலைவர் அருண் குமார் மனோசா கூறியுள்ளார்.
10 லட்சத்துக்கான இந்தக் காப்பீட்டுக்கு ஒருவருக்கு ரூ.2-ஐ விடக் குறைவாக இருக்கும் எனவும் கூறினார்.
எஸ்பிஐ மொபைல் வேலெட் பட்டி
ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான இது கேட்டரிங், சுற்றுலா மற்றும் இணைய டிக்கெட் நடவடிக்கைகள் கையாள்கிறது. தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் எஸ்பிஐ மொபைல் வேலெட் பட்டியில் இணைந்து டிஜிட்டல் மூலமாக பணப் பரிவரித்தனை சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்
ரயில்வே டிக்கெட் வழங்கும் பிற சேவைகளை அதிகரிக்க இன்னும் சில மாதங்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை விற்கும் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இ-டிக்கெட் ரத்து செய்தல்
இ-டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் பணம் திரும்பப் பெறுதலை மேலும் சுலபமாக்கக் கூடிய ஆண்ட்ராய்ட் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதனால் டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் பணத்தை திருப்பி அளிக்கும் சேவை எளிதாகும் என்றும் கூறினார்.
இ-வேலெட்
சில தொழில்நுட்ப பிரச்சனைகளால் கார்டு பேமெண்ட் செய்யும் போது 2-3 சதவீத தோல்வி ஏற்படுகிறது. எனவே ஆதார் மற்றும் பான் கார்டுகளை இ-வேலெட் உடன் இணைத்து புதிய சேவையை அறிமுகப்படுத்துவதினால் பேமெண்ட் தொல்வி குறைக்கப்படும்
தசரா அல்லது தீபாவளி
இந்த புதிய இ-வேலெட் சேவைக்கான வேலைகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளதால் அக்டோபர் மாதத்தில் தசரா அல்லது தீபாவளியின் போது ஐஆர்சிடிசியின் இ-வேலெட் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
சேவை மெருகேற்றுதல்
ஐஆர்சிடிசி நிறுவனம் மேலும் தங்களது சேவைகளை மெருகேற்ற மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்,
மைசூர், மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட், உணவு பரிமாறல் & ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக
அருண் குமார் மனோசா தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications