வங்கி கணக்கு திறப்பது, வருமான வரி தாக்கல் செய்ய, பங்குகள் வாங்க விற்க என பான் கார்டின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதை மேலும் எளிதாக்கும் முயற்சியை வருமான வரித்துறை எடுத்துள்ளனர்.

நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் நிறுவனங்களுக்கான (டான்) எண்களை மின்னணு மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு பதிவு செய்த 24 மணி நேரத்தில் அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தனி நபருக்கான பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதர் எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். ஆதர் அட்டைப் பயன்படுத்தி விண்ணப்பிப்பவர்களின் கையெழுத்தைச் சரி பார்க்கும் முறை எஸ்டிஎல் மற்றும் இ-கவர்னன்ஸ் சார்ந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் பான் அல்லது டான் எண்ணிற்கு விண்ணப்பிக்கும் போது டிஜிட்டல் கையெழுத்துடன் விண்ணப்பித்தால் பான் கார்டுகள் வழங்கும் என்எஸ்டிஎல் மற்றும் இ-கவர்னன்ஸ் சார்ந்த நிறுவனங்களுக்கு அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி இணையம் மூலமாக விண்ணப்பித்த ஒரே நாளில் அணைத்து தகவல்களும் சரியாக இருந்தால் பான் மற்றும் டான் கார்டுகளைப் பெற இயலும்.
இதன் மூலம் பேப்பர் விண்ணப்பங்கள் குறையும், இரண்டு அட்டைகள் வழங்குவதைத் தவிர்க்க இயலும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications