வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் இன்க் நிறுவனம் யாகூ இன்க் நிறுவனத்தை 5 பில்லியன் டாலருக்கு வாங்க அறிவிக்க இருக்கிறது என்று இது குறித்து விஷயம் தெரிந்திருந்த ஒருவர் கூறியுள்ளார்.
இன்று அறிவிக்க வாய்ப்பு
யாகூ நிறுவனத்தை வாங்குவதற்கான அறிவிப்பு இன்று நியூ யார்க் வர்த்தகம் தொடங்கும் முன்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாகூ நிறுவனத்தின் எதிர்கால மாற்றுத் திட்டங்களை பிப்ரவரி மாதம் அறிவித்தது, இந்த மாதத்திற்குள் யாகூ இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
யாகூ கருத்தை தெரிவிக்கவில்லை
வெரிசோன் இதைப் பற்றி அறிவிக்கத் தயாராக இருந்த நிலையிலும் யாகூ இதைப்பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
4.8 பில்லியன் டாலர்
இது குறித்த முதலாவதாக ப்ளூம்பெர்க் செய்தியில் வெளியான போது திங்கட்கிழமை 4.8 பில்லியன் டாலருக்கு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
வெரிசோன் முன்னிலை
ராய்ட்டர்ஸ் இதழில் யாகூ நிறுவனத்தைக் கைப்பற்றும் முடிவில் வெரிசோன் நிறுவனமே முன்னிலை வகிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
யாகூ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு
யாகூ நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மரிஸா, இவர் கூகுள் நிறுவனத்தின் முதல் பெண் பொறியாளர் ஆவார்.
இவர் கூகுள் நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததால் இவர் யாகூ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
கடும் முடிவுகள் பல சர்ச்சைகள்
யாகூ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் மொபைலில் கவனம் செலுத்தாத நிறுவனத்தை மொபைல் சார்ந்த வியாபாரத்தில் கவனம் செலுத்தினார்.
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்று இல்லாமல் சில வளர்ச்சி அடையாத நிறுவனங்களை வாங்கியதன் மூலம் அந்த நிறுவனங்களின் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.
டிஜிட்டல் ஊடகங்கள்
அதுமட்டும் இல்லாமல் இன்னும் டிஜிட்டல் ஊடகங்கள் துறை முதலீடு அதில் பல்வேறு பிரிவுகள் எனத் துவங்கி அதிலும் நட்டத்தையே சந்தித்து பல பிரிவுகள் மூடப்பட்டன. இதனால் 15% பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர்.
தற்போது யாகூவை ஏதேனும் நிறுவனம் வாங்கும் போது மரிசா நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
யாகூவை விற்பதாக அறிவிப்பு
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏஓஎல் (AOL) நிறுவனத்தை வங்காலாம் என்றும் நிறுவனம் முடிவு செய்தபோது மரிசா ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் தற்போது வெரிசோனுடன் இனையும் போது அது சத்தியமாக உள்ளது. ஏஓஎல் (AOL)நிறுவனத்தை சென்ற வருடம் வெரிசோன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
வெரிசோனின் நம்பிக்கை
யாகூவுடன் இணையும் போது யாகூவின் உள்ளடக்கம் மற்றும் ஏஓஎல் விளம்பர தொழில்நுட்பத்துடன் வெரிசோனின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications