சென்னை: பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது, வாராக் கடனாக உள்ள 13 ஆயிரம் கோடியை வசூலிக்க வேண்டும், அதனுடம் மத்திய அரசின் வங்கிகளுக்கான சட்டத்திட்டங்களை எதிர்த்தும், வங்கி ஊழியர்களுக்கான கோரிக்களை முன்நிறுத்தி நாட்டின் அனைத்து வங்கி அமைப்புகளும் இணைந்து இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளது.
இன்றைய போராட்டத்தில் 40 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் நாட்டின் 80,000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் இந்தியா முழுக்க வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி சேவைகள் கடுமையாக பாதித்துள்ளது.
இதேக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற ஜூலை 12 மற்றும் 13 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய போவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது.
ஆனால் கடைசி நிமிடத்தில் டெல்லி உயர் நீதிமன்ற தலையிட்டு வேலை நிறுத்தத்திற்குத் தடை விதித்ததை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இப்போது வரும் 29-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தில் சேர வேண்டும் என்று AIBEA, NCBE, BEFI, NOBW, AIBOC, AIBOC, Nobo என 9 தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கி ஊழியர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை நிறுவனங்களின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் இந்த சூழ்நிலையில், மத்திய 13 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை ஒண்றிணைக்கும் திட்டத்தை வடிவமைத்து வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications