ஒரு ரூபாயில் ரூ.10 லட்சத்துக்கான காப்பீடு: ஐஆர்சிடிசி

டெல்லி: செப்டம்பர் மாதம் முதல் ஒரு ரூபாயில் ரூ.10 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்த உள்ளது.

விபத்துகள் ஏற்படும்போது இந்திய ரயில்வே அளிக்க வேண்டிய இழப்பீடு தொகைக்கு பதிலாக சரியான டிக்கெட் உள்ளவர்களுக்குக் காப்பீட்டை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

காப்பீட்டின் பயன்

காப்பீட்டின் பயன்

ஐஆர்சிடிசி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவருமான மனோச்சா இது குறித்து கூறுகையில் விபத்துகள் நடக்கும் போது ஏற்படும் மரணம், காயம் மற்றும் உடல் குறைபாடுகள் என அனைத்தும் பாதிப்புகளுக்குக்கும் இந்தக் காப்பீடு அடங்கும் என்று கூறினார்.

செப்டம்பர் மாதம் முதல்

செப்டம்பர் மாதம் முதல்

தற்போது இந்தக் காப்பீடு சலுகை ஐஆர்சிடிசியுடன் ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகிறது, இதை செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.

மூன்று நிறுவனங்ள் தேர்வு

மூன்று நிறுவனங்ள் தேர்வு

இதற்காக 19 நிறுவனங்களிடம் இருந்து ஏலம் நடத்தி ஸ்ரீராம் ஜெனரல், ராயல் சுந்தரம் மற்றும் ஐசிஐசிஐ லம்பார்ட் என மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விபத்து நேர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் போது மருத்துவ செலவுகள் உட்பட அனைத்தும் காப்பீட்டு நிறுவனமே ஏற்கும் என்றும் மனோச்சா தெரிவித்தார்.

கட்டாயம் அல்ல

கட்டாயம் அல்ல

எனினும் இது பயணிகளின் விருப்பத் தேர்வே கட்டாயம் அல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக தற்போது 5 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ரெட் பஸ்

ரெட் பஸ்

இதேப் போன்று தனியார் ரெட் பஸ் டிக்கெட் நிறுவனமும் பயணிகளுக்கான விருப்ப காப்பிட்டு சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+