பெங்களுரூ: 2 வருடங்களுக்கு முன் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் ஆன்லைன் ஆடை விற்பனை நிறுவனமான மைந்திரா நிறுவனத்தைக் கைப்பற்றியது. தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் மைந்திரா பிரிவு ஜபாங் நிறுவனத்தைக் கைப்பற்றி இந்தியாவின் மிகப்பெரிய ஆடை விற்பனை நிறுவனமாக உருவெடுக்கத் தயாராகி வருகிறது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் தொடர் கைப்பற்றுதலுக்கு முக்கியக் காரணம் அமேசான்.
ஜபாங்
இந்திய சந்தையில் தொடர்ந்து வர்த்தகச் சரிவை சந்தித்து வந்த ஜபாங், கடந்த 4 காலாண்டுகளாக வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பல செலவின குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதன் மூலம் கடந்த இரு காலாண்டுகளில் லாபத்தைச் சந்தித்துள்ளது ராகெட் இண்டர்நெட் தலைமையிலான ஜபாங் நிறுவனம்
ராக்கெட் இண்டர்நெட்
பெர்லின் நகரத்தை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் இந்த ராக்கெட் இண்டர்நெட் நிறுவனம் இந்தியாவில் கூப்பன் நேஷன், புட் பாண்டா, ஜபாங், விம்டூ ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறது.
முதலீட்டாளர்கள்
ஜபாங் நிறுவனத்தின் நிறுவனரான ராக்கெட் இண்டர்நெட் மற்றும் இதன் மிகப்பெரிய முதலீட்டாளரான சுவீடன் முதலீட்டு நிறுவனம் Kinnevik ஆகிய இரண்டும் தனது வர்த்தகப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக ஜபாங் நிறுவன வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேறத் திட்டமிட்டது
இதன் காரணமாக ஜபாங் நிறுவனம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
2000 கோடி ரூபாய்
150 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த ஜபாங் நிறுவனத்தைப் பிளிப்கார்ட் சுமார் 2,000 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரு தரப்பும் விற்பனை மதிப்பு குறித்து எவ்விதமான தகவல்களையும் அளிக்கவில்லை.
வலிமை அடையும் பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஜபாங் கைப்பற்றுதல் மூலம் இந்தியாவில் ஆன்லைன் ஆடை விற்பனையில் அமேசான் உடன் போட்டி போடும் வகையில் பிளிப்கார்ட் தற்போது வலிமை அடைந்துள்ளது.
பேஷன்
இந்திய பேஷன் சந்தையில் பிளிப்கார்ட் மற்றும் ஜபாங் நிறுவனத்தின் இணைப்பு மிகப் முக்கியமான ஒன்று. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் பிளிப்கார்ட் மற்றும் ஜபாங் நிறுவனங்கள் இணைந்து பிராண்ட் ரிலேஷன்ஷிப், வாடிக்கையாளர் சேவை எனப் பல்வேறு இடங்களில் இணைந்து பணியாற்ற உள்ளோம் என் மைந்திரா நிறுவனத்தின் சீஇஓ அனந்த் நாராயணன் கூறினார்.
பன்னாட்டு பேஷன் ஆடைகள்
ஜபாங் இணைப்பின் மூலம் மைந்திரா அதாவது பிளிப்கார்ட் ஆடை விற்பனை பிரிவில் இனி Dorothy Perkins, டாப்ஷாப், டாம் டெய்லர், ஜி ஸ்டார் ரா ஆகிய நிறுவனங்களின் புதிய ஆடைகள் பிரத்தியேகமான முறையில் விற்பனை செய்யப்படும்.
அலிபாபா முதல் பிளிப்கார்ட் வரை
ஜபாங் நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டில் முதல் ஆளாய் இருந்தது சீனாவின் அலிபாபா நிறுவனம் தான். ஜபாங் நிறுவனத்தை எப்படியாவது கைப்பற்றிப் பேடிஎம் துணையுடன் இந்தியாவில் தனது வர்த்தகத்தை முறையாகத் துவங்க வேண்டும் என்பதே இதன் திட்டம். ஆனால் இந்த வாய்ப்பை தற்போது பிளிப்கார்ட் தட்டி பறித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் மைந்திரா உட்படப் பிக் பஜார் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ப்யூச்சர் குரூப், ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஈகாமர்ஸ் பிரிவு Abof, ஸ்னாப்டீல், டாடா குழுமத்தின் ஆன்லைன் விற்பனை தளம் டாடா கிளிக், ரிலையன்ஸ் AJIO ஆகியோர் போட்டி போட்டு வந்தனர்.
வருவாயில் 7% சரிவு..!
2015ஆம் ஆண்டு வர்த்தகத்தில் ஜபாங் நிறுவனம் 7 சதவீத வருவாய் சரிவை சந்தித்து 869.1 கோடி ரூபாய் என்ற குறைந்த அளவிலான வருவாய்ப் பெற்றது.
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய்க் குறைந்தாலும் நஷ்டத்தின் அளவை 159.5 கோடி ரூபாயில் இருந்து வெறும் 46.7 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
300 மில்லியன் டாலர்
தொடர்ந்து வர்த்தகச் சரிவை சந்தித்த ஜபாங் சில முக்கிய மாற்றங்களின் மூலம் நஷ்டத்தின் அளவை 46.7 கோடி ரூபாயாகக் குறைந்து, நிகர விற்பனை அளவு 1,503 கோடி ரூபாய் உயர்ந்தது. ஆர்டர் எண்ணிக்கையும் 54 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதிலும் கடந்த 2 காலாண்டுகளாக இந்நிறுவனத்தில் வர்த்தகம் அதிகளவில் உயர்ந்துள்ளது.
டாப் 3 நிறுவனங்கள்
2015ஆம் நிதியாண்டில் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் அமேசான், பிளிப்கார்ட், ஸ்னார்டீல் ஆகிய நிறுவனங்களின் மொத்த நஷ்டத்தின் அளவு 5,052 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications