யாகூ நிறுவனத்தை வாங்குவதைத் திங்கட்கிழமை வெரிசோன் நிறுவனம் அறிவிக்கும் என்று கடந்த சில நாட்களாகக் கூறப்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று யாகூ நிறுவனத்தை வாங்க முயற்சித்த பல நிறுவனங்களின் போட்டியில் வெரிசோன் வெற்றிபெற்று அதிகாரப்பூர்வமாக 4.83 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக அறிவித்தது.
வெரிசோன் நிறுவனம் கைப்பற்றிய பங்குகள்
சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவில் உள்ள 15 சதவீத பங்குகள் மற்றும் யாகூ ஜப்பான்னில் உள்ள 35.5 சதவீத பங்குகளைத் தவிர்த்து மற்ற பங்குகள் அனைத்தும் வெரிசோன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
2017 முதல் காலாண்டு வரை
அந்த இரு நிறுவனக்களின் பங்குகள் மட்டும் ரூ 40 பில்லியன் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனங்களுக்கான இணைப்பு முழுமையடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பங்குதாரர்களுடனான ஒப்பந்தம் மற்றும் நெறிமுறை அங்கீகாரம் பெறும் வரை யாஹூ, ஒரு தனி நிறுவனமாக தொடரும் என்றும் கூறியுள்ளனர்.
இணைய வர்த்தகம்
யாகூவின் இந்தப் பங்குகளை வாங்குவதன் மூலமாக வெரிசோனின் ஏஓஎல் நிறுவனத்தின் இணைய வர்த்தகம் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெரிசோனின் பங்குகளின் விலை
இதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் வெரிசோனின் பங்குகளின் விலை உயர்ந்தும், யாகூவின் பங்குகளின் விலை 1.5 சதவீதம் குறைந்து காணப்பட்டது.


Click it and Unblock the Notifications