ஒரு பொருள் வாங்கக் கடைகள், ஷாப்பிங் மால் என்று செல்லாமல் கணினி, மொபைல் முன் அமர்ந்த படியே எல்லாப் பொருட்களையும் உட்கார்ந்த இடத்தில் பெறும் வசதியை இ-காம்ர்ஸ் துறை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை உயர்வதற்கு இணையாக நாட்டில் 80 மில்லியன் அதாவது 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பற்றாக்குறை ஏற்படும். இப்பற்றாக்குறையின் பெரும் பங்கை இ-காமர்ஸ் துறை தீர்க்கும் என எச்எஸ்பிசி ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
எப்படி..?
ஏற்கனவே லட்சம் கணக்கான இந்தியர்கள் இ-காமர்ஸ் துறையில் வேலை செய்து வரும் நிலையில், இ-காமர்ஸ் சேவை துறையில் புதிய வேலை வாய்ப்புகள் நிறைய உருவாக வாய்ப்புள்ளதாக எச்எஸ்பிசி கூறியுள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை, ஸ்மார்ட் ஃபோன், இளைஞர்கள் மக்கள் தொகையுடனான ஒத்துழைப்புடன் இ-காமர்ஸ் துறையை நல்ல வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக சீனாவுடன் இந்தியாவை ஒப்பிடும் போது பின்தங்கியே உள்ளது. ஆனால் வரும் காலத்தில் இணைய ஊடுருவல் மற்றும் ஆன்லைன் கொள்முதல் உதவியுடன் இ-காமர்ஸ் துறை சரியான மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் பிற துறைகளைக் காட்டிலும் இ-காமர்ஸ் துறையில் வேலை வாய்ப்புகளில் அதிக மாற்றங்கள் நடந்துள்ளன என்றும் அது மட்டும் இல்லாமல் இந்தியர்களின் பணி திறன்கள் தொழில் முனைவோருக்கு ஏற்றவாரும் பொருந்துகிறது என்றும் எச்எஸ்பிசி கூறியுள்ளது. ஆன்லைன் மூலமாக வாங்குவது அதிகரிக்கும் நிலையில் இ-காமர்ஸ் துறையில் 20 மில்லியன் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், அதில் 70 சதவீதம் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோக பிரிவிலும், 30 சதவீதம் ஐடி, நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் 30 சதவீதமும் உருவாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைச் சரியாக கண்டறிந்து பார்க்கும் போது இணையதளம் மற்றும் இ-காமர்ஸ் துறையில் 12 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆய்வின் படி 24 மில்லியன் நபர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றாக்குறை ஏற்படும் என்றும் அதில் பாதி 12 மில்லயன் வேலை வாய்ப்புகளை இ-காமர்ஸ் துறை அளிக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் டோபோ (Taobao- டிஜிட்டலில் முறையில் கிராம மக்கள் அமைக்கக் கூடிய டிஜிட்டல் சந்தை) கிராமங்கள் போன்ற மாற்றத்தைக் கிராமப்புற பகுதிகளில் ஏற்படுத்தி உள்ளன. அதே போல 10 வருடங்களில் இந்தியாவில் செயல்படுத்தும் போது 5 மில்லியன் கிராம வியாபாரிகளுக்கும் பல வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்தியாவின் தற்போதைய வேலை வாய்ப்பு நிலை பெரும்பாலான துறைகளில் குறைவான உற்பத்தியையே தருகிறது. விவசாயம் மிகவும் குறைவான உற்பத்தியையே அளித்துவருகிறது. மற்றொரு புறம் பார்த்தால் நிதி சேவைகள் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால் மொத்த பணியாளர் உற்பத்தியில் இந்தியா மிகவும் குறைவாக உள்ளது என்றும் எச்எஸ்பிசி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
புதிய வேலை வாய்ப்புகள்
பின்தங்கி உள்ள இந்தியா
12 லட்சம் வேலைவாய்ப்புகள்
24 மில்லியன் வேலைவாய்ப்பு பற்றாக்குறை
டிஜிட்டல் சந்தை
குறைவான உற்பத்தி
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications