பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவன மைந்திரா, ஜபாங் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்தியாவின் ஆன்லைன் ஃபேஷன் ஷாப்பிங் வர்த்தக சந்தையில் மிகப்பெரிய கூட்டமியாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பிரபல ஆன்லைன் ஃபேஷன் நிறுவனமான ஜபாங் பெரும் வர்த்தக சரிவு. இதைத் தொடர்ந்து விற்பனைக்கு வந்த ஜபாங் நிறுவனத்தை மிகுந்த போட்டிக்கிடையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜபாங் நிறுவனத்தை வாங்கியதை உறுதி செய்து, அதன் ஊழியர்களை வரவேற்ற ஃபிளிப்கார்ட் துணை நிறுவனர் சச்சின் பன்சால் நாம் மூவரும் இணைந்து சரித்திரம் படைப்போம் என்று டிவிட்டியுள்ளார். தனது மைந்திரா நிறுவனத்தின் கீழ் ஜபாங் நிறுவனத்தை 70 மில்லியன் டாலர் விலை கொடுத்து ஃபிளிப்கார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. ஜபாங் நிறுவனத்தை வாங்க ஸ்னாப்டீல், ஃப்யூச்சர் குரூப், ஆதித்யா பிர்லாவின் ஏபிஓஎஃப் ABOF நிறுவனங்களுடன் மிகுந்த போட்டி நிலவியது கடைசியாக ஃபிளிப்கார்ட் வெற்றிபெற்றது டோரதி பெர்கின்ஸ், டாப்ஷாப், டாம் தையல்காரர், ஜி ஸ்டார் ரா, புகாட்டி காலணிகள், தி நார்த் ஃபேஸ், ஃபாரெவர் 21, ஸ்வரோவ்ஸ்கி, டிம்வர்லேண்ட் & லகோஸ்டி என சர்வதேச பிராண்டுகளுடன் தற்போது மைந்த்ரா நிறுவனம் பிரத்தியேக ஆன்லைன் தளமாக இருக்கிறது. ஜபாங்குடன் இணைந்ததால் மைந்த்ரா நிறுவனம் தற்போது 15 மில்லியன் ஆக்டிவ் பயனர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களில் இதுபோன்ற ஒருங்கிணைப்பு பெரிதாக பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் இது போன்ற பல ஒருங்கிணைப்புகள் நிகழும் எனவும் கூறப்படுகின்றன. 2015 ஆம் வருடம் ஜபாங் நிறுவனத்தை வாங்க முயன்ற அமேசான் நிறுவனம் சில கணக்கு சரிபார்ப்பு குறையால் தவிர்த்துவிட்டது. தனது போட்டி நிறுவனம் ஜபாங் நிறுவனத்தை மைந்தரா நிறுவனம் வாங்கியதால் விலை குறைப்பு, சலுகைகள் குறைய வாய்ப்புள்ளது. தற்போது ஒரு பெரும் போட்டி குறைந்துள்ளதால் மைந்த்ரா நிறுவனத்திற்கு இதன் விளம்பர மற்றும் வியாபார செலவுகளைக் குறைக்க இயலும். மைந்திரா நிறுவனர் ஆனந்த் நாரயனன் ஜபாங் நிறுவனம் தனிப்பட்ட நிறுவனமாகவே செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
சரித்திரம் படைப்போம்
70 மில்லியன் டாலர்
போட்டி நிறுவனங்கள்
சர்வதேச பிராண்டுகள்
15 மில்லியன் பயனர்கள்
ஒருங்கிணைப்பு
அமேசான்
விலை போர் குறைய வாய்ப்பு
தனித்து செயல்படும்


Click it and Unblock the Notifications