சிங்காரச் சென்னையில் இதுதான் ரொம்ப ‘காஸ்ட்லி’..!

தமிழகத்தின் தலைநகரமானசென்னை பழமையும் புதுமையும் சரியான கலவையில் கலந்திருக்கும் நகரம் என்பது உலகம் அறிந்த விஷயம். அதே போல தொழில்களும், கட்டுமான வசதிகளும் வளர்ச்சி அடைந்த ஒரு நகரமாகும்.

இதன் காரணமாகவே, வந்தாரை வாழ வைக்கும் நகரமான சென்னையை நோக்கி சிறிதும் பெரிதுமாக வீடு வாங்க நினைப்பவர்கள் பலரும் படையெடுக்கின்றனர்.

இவ்வாறு சென்னையில் வீடு வாங்கி செட்டில் ஆக நினைப்பவர்களின் வசதிக்காக சென்னையின் 5 தலைசிறந்த இடங்களைப் பற்றிய விபரங்களை இந்த கட்டுரையின் மூலமாக உங்களுக்குக் கொடுக்கிறது.

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம்

சென்னையின் மேற்குப் பகுதியிலுள்ள பழமையான இடங்களில் ஒன்றாகத் திகழும் நுங்கம்பாக்கம் ஐரோப்பிய கலாச்சாரத்தைப் போன்று இருக்கும்.

இந்த இடத்தில் தான் முக்கியமான நிறுவனங்களான ஐ.டி.சி லிமிடெட், டாக்டர் ரெட்டி'ஸ் லேப், சுலக்ஷனா சர்க்யூட்ஸ் லிமிடெட், பயோனியர் ஸ்டீல் பிரைவேட் லிமிடெட் மற்றும் டெக் மகிந்திரா லிமிடெட் போன்றவை உள்ளன.

முக்கியமான சாலைகளாக கருதப்படும் வி.ஆர் இராமநாதன் சாலை, மெக் நிக்கோலஸ் சாலை, ஸ்டெர்லிங் சாலை, குளக்கரை சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை மற்றும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஆகியவற்றால் இந்த இடம் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

 

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

கடந்த 36 மாதங்களில், நுங்கம்பாக்கத்தில் மட்டும் சுமார் 15.8% சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இந்த இடத்தின் வெகு வேகமான கட்டுமான வசதிகள் வளர்ச்சியின் காரணமாக, அதிகமாக விரும்பப்படும் குடியிருப்புப் பகுதியாகவும் உள்ளது நுங்கம்பாக்கம்!

விலை

விலை

நுங்கம்பாக்கத்தில் உள்ள சில உயர் ரக கட்டுமான திட்டங்களில் சில - ஆட்ராய்ட் அர்பன் இம்பீரியா, விஜய் சாந்தி தி ஆர்ட், ஏ.ஆர் பவுண்டேஷன்ஸ் அமர அவானா மற்றும் ஆட்ராய்ட் அர்பன் ஹவுஸ் ஆஃப் ஆம்ஃபல். நுங்கம்பாக்கதிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் சதுர அடிக்கு ரூ.18,382//-க்கு கிடைக்கின்றன.

இராயப்பேட்டை

இராயப்பேட்டை

ஆடம்பரமான வீடுகளை விரும்புபவர்கள், சென்னையின் மையமான பகுதியில் உள்ள இராயப்பேட்டையை மறக்க மாட்டார்கள்.

5 கிமீ தொலைவிலேயே மெரினா கடற்கரையையும், சுற்று வட்டத்தில் மைலாப்பூர், நுங்கம்பாக்கம், நந்தனம், மந்தைவெளிப்பாக்கம், கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கோபாலபுரம், எழும்பூர், ஆழ்வார்பேட்டை மற்றும் அபிராமபுரம் போன்ற இடங்களையும் கொண்டுள்ளது இராயப்பேட்டை.

 

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

நல்ல அமைப்புடன் கூடிய இடத்தில், 1, 2, 3, 4 மற்றுமு; 5 படுக்கையறை வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இராயப்பேட்டையில் கிடைக்கின்றன.

விலை

விலை

ஆடம்பரத்தை விரும்புபவர்களுக்காகவே இராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் எக்ஸ்க்ளூசிப், லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் வெர்டிகா, ஆதிக்ராம்யர், தி செராய் மற்றும் சாந்தி பில்டர்ஸ்-ன் இராம் ஆகிய திட்டங்கள் உள்ளன.

இராயப்பேட்டையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் சதுர அடி ரூ.18,071/-க்கு கிடைக்கின்றன.

 

இராஜா அண்ணமலைபுரம்

இராஜா அண்ணமலைபுரம்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் நிரம்ப பெற்றிருக்கும் இடமாக இராஜா அண்ணமலைபுரம் உள்ளது.

மனை விரங்கள்

மனை விரங்கள்

வீடு வாங்குபவர்களின் வசதிக்காகவே இராஜா அண்ணமலைபுரத்தில் 992 சதுர அடியிலிருந்து 6000 சதுர அடி வரையிலான வீடுகள் கிடைக்கின்றன. ஸீப்ரோஸ் ஒன் 74, ஈ.டி.ஏ ஸ்டார் லிலாக் ஹைட்ஸ், அர்ஹாம் பில்டர்ஸ் மகாதேவ் மற்றும் தேவிநாராயண் ஹெளசிங் ஸ்ரீ சாரதா நிவாஸ் ஆகியவை இங்கு வளர்ந்து வரும் ஆடம்பர குடியிருப்புகளாகும்.

விலை

விலை

இராஜா அண்ணமலைபுரத்தில் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பானது சதுர அடி ரூ.16,667/-க்கு கிடைக்கிறது.

கீழ்ப்பாக்கம்

கீழ்ப்பாக்கம்

நகரின் மையத்திலிருந்து 6 கி.மீ தொலைவிலேயே இருக்கக் கூடிய, நன்கு அறியப்பட்ட இடமாக கீழ்ப்பாக்கம் உள்ளது.
சேத்துப்பட்டு, எழும்பூர், அண்ணா நகர் மற்றும் புரசைவாக்கத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் தொடராக கீழ்ப்பாக்கம் அமைந்துள்ளது.

மெட்ரோ

மெட்ரோ

நன்கு இணைக்கப்பட்ட சாலைகளைக் கொண்டுள்ள கீழ்ப்பாக்கத்தில் தான், சென்னையின் மெட்ரோ இரயிலும் கூட கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனை விவரம்

மனை விவரம்


கீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் 910 சதுர அடி முதல் 3762 சதுர அடி வரையிலும் உள்ளன. ஜெயின் ஹெளஸிங் சுரபி, ஜெயின் ஹெளசிங் ஆர்ச் வே மற்றும் தேவிநாராயண்-ன் ஐய்கியா ஆகியவை கீழ்ப்பாக்கத்தில் வளர்ந்து வரும் ஆடம்பர திட்டங்களாகும்.

விலை

விலை

கீழ்ப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு சதுர அடி ரூ.14,267/-க்கு கிடைக்கிறது.

அண்ணா நகர்

அண்ணா நகர்

சென்னையின் வட-மேற்கு பகுதியில் உள்ள அண்ணா நகர் 1970-களில் தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தினால் வளர்த்தெடுக்கப்பட்ட இடமாகும்.

திருமங்கலம் மெட்ரோ இரயில் அருகில்

திருமங்கலம் மெட்ரோ இரயில் அருகில்

இன்று, சென்னையின் மிகச் சிறந்த குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக அண்ணா நகர் உள்ளது.

விரைவில் தொடங்கப்பட்டு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்பட உள்ள திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகிலேய அண்ணா நகர் அமைந்துள்ளது.

 

விலை

விலை

இந்த இடத்தில் செழுமையான வீடுகளை வாங்க விரும்புபவர்கள் ஓசோன் மெட்ரேஸோன், ஓசோன் தி கார்டனியா, நீயூரி ப்ராபர்டிஸ் பார்க் டவர் மற்றும் இந்தியா சாந்திநிகேதன் போன்ற திட்டங்களில் கவனம் செலுத்தலாம். ரூ.13,496/-க்கு ஒரு சதுர அடி நிலம் என்ற வகையில் இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கிடைக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+