நாடு முழுவதும் வங்கி சேவைகள் முடக்கம்.. 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது, வாராக் கடனாக உள்ள 13 ஆயிரம் கோடியை வசூலிக்க வேண்டும், அதனிடம் மத்திய அரசின் வங்கிகளுக்கான சட்டத்திட்டங்களை எதிர்த்தும், வங்கி ஊழியர்களுக்கான கோரிக்களை
முன்னிறுத்தி நாட்டின் அனைத்து வங்கி அமைப்புகளும் இணைந்து இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளது.

10 லட்சம் வங்கி ஊழியர்கள்

10 லட்சம் வங்கி ஊழியர்கள்

இன்றைய போராட்டத்தில் 40 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் நாட்டின் 80,000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளது.

வங்கி சேவைகள்

வங்கி சேவைகள்

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் இந்தியா முழுக்க வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி சேவைகள் கடுமையாகப் பாதித்துள்ளது.

போராட்டம்

போராட்டம்

இதே கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்ற ஜூலை 12 மற்றும் 13 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது.

உயர் நீதிமன்றம்
 

உயர் நீதிமன்றம்

ஆனால் கடைசி நிமிடத்தில் டெல்லி உயர் நீதிமன்ற தலையிட்டு வேலை நிறுத்தத்திற்குத் தடை விதித்ததை அடுத்து வேலை நிறுத்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

29-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் கையில் எடுத்துள்ளனர்.

அகில இந்திய வங்கி ஊழியர்கள்

அகில இந்திய வங்கி ஊழியர்கள்

மொத்தம் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வங்கி அமைப்பு

வங்கி அமைப்பு

தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தில் சேர வேண்டும் என்று AIBEA, NCBE, BEFI, NOBW, AIBOC, AIBOC, Nobo என 9 தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

13 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்

13 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்

வங்கி ஊழியர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை நிறுவனங்களின் இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடும் இந்தச் சூழ்நிலையில், மத்திய 13 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை ஒன்றிணைக்கும்
திட்டத்தை வடிவமைத்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank strike to hit operations on Friday

Banking operations will be impacted across the country on Friday with around 10 lakh bankers of 40 private and state-run banks striking work in protest against the central government's banking policies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X