பெங்களுரூ: 13 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக இன்போசிஸ், தனது ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளை வழங்கியுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் திளைத்துள்ளனர். இது போதாதென்று அடுத்த 5 வருடங்களுக்கு இதேபோல் நிறுவனப் பங்குகளை ஊழியர்களுக்கு வழங்குவோம் என்றும் உறுதியளித்துள்ளது.
என்னடா நடக்குது இங்க..? இது தான் டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ நிறுவன ஊழியர்களின் தற்போதைய மைண்ட் வாய்ஸாக இருக்கும்.!
இந்திய ஐடி சந்தை ஏற்கனவே பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் இன்போசிஸ் விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின் பல முக்கிய உயர் அதிகாரிகளை இழந்துள்ளது. இந்நிலையில் ஊழியர்களை நிறுவனத்தில் நிலைத்திருக்கவும், தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றவும், இன்போசிஸ் நிறுவனம் 13 வருடத்திற்குப் பிறகு முதல் முறையாக ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் நிறுவனத்தில் ஊழியர்களின் வெளியேற்றம் அதிகளவில் குறைக்கப்படும் என்பது இன்போசிஸ் நம்பிக்கை. முதல் கட்டமாக இன்போசிஸ் நிறுவனத்தில் நடுநிலை மேலாளர், கன்சல்டன்ட் மற்றும் டெக்னிக்கல் லீட் ஆகிய பதவிகளில் இருக்கும் 7,800 பேருக்கு 250 முதல் 500 பங்குகளை வரை அளிக்க முடிவு செய்துள்ளது இன்போசிஸ். 7,800 பேர் என்பது குறைவாகத் தெரிந்தாலும், இப்பதவிகளில் இருக்கும் மொத்த ஊழியர்களின் இது 25 சதவீதம். மீதமுள்ள ஊழியர்களுக்கு அடுத்த 4 முதல் 5 வருடத்தில் 25 சதவீத ஊழியர்கள் எனப் பிரித்துப் பங்குகளை வழங்க இன்போசிஸ் முடிவு செய்துள்ளது. இந்தப் பங்குகளை ஊழியர்கள் எப்போது வேண்டுமானலும் விற்கலாம். இதனால் உயர் கிழ் மட்ட நிர்வாகப் பொறுப்பில் அடுத்தச் சில வருடங்களுக்கு எவ்விதமான மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் வழங்கிய பங்குகளின் முக மதிப்பு 5 ரூபாய் என ஒரு பங்கின் விலை 1,077 ரூபாய் என்ற விலையில் பங்குகள் ஊழியர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நபருக்கு 2.68 லட்சம் ரூபாய் (250 பங்குகள்) முதல் 5.36 லட்சம் ரூபாய் (500 பங்குகள்) வரை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இன்போசிஸ் நிறுவன வளர்ச்சியில் ஊழியர்களுக்குப் பங்கு இருப்பதைப் போல லாபத்தில் அவர்களுக்குப் பங்கு அளிக்க வேண்டும் என் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கான பங்கு விநியோகம் அடுத்த 4 முதல் 5 வருடங்களுக்குத் தொடரும் என இன்போசிஸ் குழுமத்தின் மனித வள பிரிவின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சங்கர் தெரிவித்தார்.
இன்போசிஸ்
முதல் கட்டம்
4 வருடம்
பங்குகள்..
வளர்ச்சி
இதையும் படிங்க
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications