பிளிப்கார்ட் நிறுவனத்தில் 1,000 ஊழியர்கள் 'பணிநீக்கம்'.. காரணம் 'ஜபாங்'?

பெங்களுரூ: நாட்டின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட், தனது நிறுவனத்தின் தகுதி திறனை எட்டாத (Professional Expectation) 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களைத் தகுதி திறன் என்ற பெயரில் அதிகளவில் பணிநீக்கம் செய்து தனது செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தப் பணி நீக்கத்திற்கும் ஜபாங் (Jabong) நிறுவனத்தைக் கைப்பற்றியதற்கும் தொடர்புண்டா..?

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இணையதளச் சில்லறை விற்பனை சந்தையில் அமெரிக்க நிறுவனமான அமேசானுடன் கடுமையாகப் போட்டி போட்டுத் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு இருக்கும் பிளிப்கார்ட் ஜபாங் நிறுவனத்தைக் கைப்பற்றிய முழுமையாக ஒரு வாரம் கூட முடியாத நிலையில் 1000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

பிளிப்கார்ட் பணிநீக்க நடவடிக்கைகள் குறித்து இந்நிறுவனத்தின் 2 அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

 

1,000 ஊழியர்கள் பணிநீக்கம்

1,000 ஊழியர்கள் பணிநீக்கம்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்தத் திடீர் முடிவு மூலம் குறைந்தபட்சம் 700 ஊழியர்கள் முதல் 1000 ஊழியர்கள் வரை பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பணி நீக்கம் செய்யப்படும் அனைத்து ஊழியர்களுக்கு ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது சில மாதங்கள் சம்பளத்துடன் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் சில தெரிவித்துள்ளனர்.

 

கிளின் பிராசஸ்

கிளின் பிராசஸ்

பிளிப்கார்ட் நிறுவனத்தை வர்த்தகச் சந்தைக்கு ஏற்றவாறு, முறையாக வகையில் மெலிந்த நிறுவனமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. அதற்காகவே இந்தக் கிளின்அ பிராசஸ் என்றும் பிளிப்கார்ட் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வளர்ச்சியும்.. செலவின குறைப்பு..

வளர்ச்சியும்.. செலவின குறைப்பு..

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் போட்டி அதிகரித்துள்ள நிலையில், நிறுவனத்தின் முதலீட்டு செய்த ஆசாமிகளின் அசைவுகளுக்கு ஆடும் வகையில் லாபத்தை அளித்த பிளிப்கார்ட் முற்பட்டுள்ளது.

இதனால் நிறுவனத்தில் ஏற்பட்டும் அதிகப்படியான செலவுகளைக் குறைக்க ஊழியர்களின் பணி நீக்கக் கொள்கையைக் கையில் எடுத்துள்ளது பிளிப்கார்ட் நிர்வாகம். ஆமா இந்தப் பணிநீக்கத்திற்கு ஜபாங் தொடர்பு உண்டா..?

 

ஜபாங்

ஜபாங்

டாடா, பிர்லா, அலிபாபா, ஸ்னாப்டீல் போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டியில் ஜபாங் நிறுவனத்தை ராக்கெட் இண்டர்நெட் நிறுவனத்திடும் இருந்து பிளிப்கார்ட் 70 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.

நிறுவனத்தில் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் ஊழியர்களை அதிகளவில் பயன்படுத்திக்கொண்டு பிளிப்கார்ட், மைந்திரா, ஜபாங் நிறுவனங்களின் வர்த்தகத்தை உயர்த்த வேண்டும் என்பதே பிளிப்கார்ட் திட்டம்.

 

ஆப்புப் பிளிப்கார்ட் ஊழியர்களுக்கு

ஆப்புப் பிளிப்கார்ட் ஊழியர்களுக்கு

ஜபாங் நிறுவன இணைப்பால் பிளிப்கார்ட் நிறுவனத்தில் கூடுதலாக இருக்கும் ஊழியர்கள், செலவுகள் என அனைத்தையும் குறைக்க முடிவு செய்துள்ளது பிளிப்கார்ட்.

30,000 ஊழியர்கள்

30,000 ஊழியர்கள்

பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 30,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பணி நீக்கத்தின் வாயிலாக இந்நிறுவனத்தின் 2.3 முதல் 3.3 சதவீதம் அளவிலான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

2வது முறை

2வது முறை

நிறுவன துவக்கம் முதல் பிளிகார்ட் நிறுவனத்தில் குவிந்த அதிகப்படியான முதலீட்டுக் காரணமாக நிறுவனம் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்த வண்ணம் இருந்தது. ஆனால் முதலீட்டாளர்கள் நெருக்கடி, அமேசான் போட்டி, வர்த்தகச் சரிவு எனப் பல்வேறு காரணங்களால் பணி நீக்கத்தில் இரண்டாவது முறையாகக் குதித்துள்ளது.

மே 2013ஆம் ஆண்டு 250 ஊழியர்களைப் பிளிப்கார்ட் நிறுவனத்தை விட்டு வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

 

40 மில்லியன் டாலர்

40 மில்லியன் டாலர்

ஏப்ரல் மாதம் பிளிப்கார்ட் அளித்த செய்தியில், இனி பிளிப்கார்ட் லாபத்தை நோக்கிய பயணம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இதில் பின் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தள்ளுபடி விற்பனை அதிகளவில் குறைந்தது, ஊழியர்களின் சம்பள உயர்வும் அதிகளவில் குறைக்கப்பட்டது.

இதன் மூலம் மாதத்திற்கு 80-100 மில்லியன் டாலர் செலவில் 40 மில்லியன் டாலரைக் குறைக்கப் பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளது. இதில் 1000 ஊழியர்களின் பணிநீக்கம் மிகப்பெரிய பங்காகும்.

 

கேம்பஸ் இண்டர்வியூவ்

கேம்பஸ் இண்டர்வியூவ்

பிளிப்கார்ட் கடந்த வருடத்தின் இறுதியில் ஐஐஎம் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் பல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்து ஆஃப் லெட்டரையும் வழங்கியது.

ஆனால்...

ஐஐஎம் கல்லூரி

ஐஐஎம் கல்லூரி

மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் கால் லெட்டர் எனப்படும், நிறுவன அழைப்பு இன்னும் அளிக்கவில்லை.

ஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கே இந்நிலை என்றால் பிற கல்லூரி மாணவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

 

தகுதி இழப்பு

தகுதி இழப்பு

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த மட்டமான செயல் மூலம் ஐஐஎம் கல்லூரியில் நடப்பு நிதியாண்டின் கேம்பஸ் இண்டர்வியூவ் செய்ய அனுமதி மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்..?

என்ன காரணம்..?

இந்த ஈகாமர்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல நிதி மற்றும் வர்த்தகச் சிக்கல் சந்தித்து வருவதால் அதிகச் சம்பளம் அளிக்க வேண்டிய ஐஐஎம் மாணவர்களின் பணி சேர்ப்பு நடவடிக்கையைத் தள்ளி வைத்துள்ளது. இதன் மூலம் அதிகளவிலான செலவுகளைக் குறைக்க முடியும் என்பது பிளிப்கார்ட் திட்டம்.

இந்த 6 மாத காலம் தாமதம் 1 வருடம் வரை நீடிக்கலாம்..!

 

ஐஐடி மற்றும் ஐஐஎம்

ஐஐடி மற்றும் ஐஐஎம்

நாட்டின் முன்னணி கல்லூரிகளாக இருக்கும் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகள் 2016ஆம் ஆண்டுக் கேம்பஸ் இண்டர்வியூவில் ஆன்லைன் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குக் குறைந்த அளவிலான வாய்ப்புகள் மட்டும் அளிக்க முடிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+