மும்பை: மொபைல் மூலம் இந்திய வங்கிகள் மத்தியிலான ஒற்றை வழி பரிமாற்ற முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதனை அதிகாரப்பூர்வமாக ஜூலை 31ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ள நிலையில் 15 தனியார் மற்றும் பொது வங்கிகள் இந்த சேவையை தனது நிறுவன மொபைல் செயலி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகள் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதாக தெரிகிறது.

ஜூலை 31ஆம் தேதி வங்கிகள் இதனை பயன்படுத்த 1000 சோதனை பயனாளர்கள், 5,000 பரிமாற்றங்கள், 90 சதவீத வெற்றி வாய்ப்புகள் ஆகியவற்றை எட்டும் நிறுவனம் ஜூலை 31ஆம் தேதி யுபிஐ சேவையை பயன்படுத்த முடியும்.
இந்நிலையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் வங்கிகளின் எண்ணிக்கை 15ஆக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என NPCI தலைவர் ஏ.பி. ஹோட்டா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications