இந்தியாவில் பல்வேறு துறைகளில் அதிகரித்து வந்த அன்னிய முதலீடுகள் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையிலும் அண்மைகாலமாக அதிகரித்துக் காணப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம், வார்பர்க் பின்கஸ் சுமார் 284 மில்லியன் டாலர் அளவிற்கு பிராமல் ரியாலிடி நிறுவனத்தில் முதலீடு செய்தது. மற்றுமொரு பன்னாட்டு தனியார் முதலீட்டாளரான ப்ளாக்ஸ்டோன், இந்தியாவில் பெங்களூருவைச் சேர்ந்த எம்பசி ப்ராப்பர்டி டெவெலப்மென்ட் மற்றும் புனேவின் பன்ச்ஷீல் ரியாலிடி ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்ததன் மூலம் நாட்டின் இரு பரபரப்பான சொத்துச் சந்தைகளை கைப்பற்றியுள்ளது.
வளர்ந்துவரும் ரியல் எஸ்டேட் துறையில் இந்த முதலீடுகள் ஒரு முதலீட்டுப் புரட்சியின் முன்னோடியாகவே பார்க்கப் படுகிறது.
எஸ்டேட் மசோதா
மத்திய அரசு ரியல் எஸ்டேட் மசோதாவிற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த மசோதா இந்தத் துறையைக் கட்டுப்படுத்தும் விதமாக விரைந்த கட்டிட திட்ட அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தத் துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவரவுள்ளது. இந்த நடவடிக்கைகள் முதலீட்டாளர்களுக்கு நம்பியையூட்டுவதுடன் மேலும் பல முதலீடுகளை ஈர்க்கவும் வழிவகுக்கும். அரசின் முயற்சிகளைத் தவிர, இந்தத் துறையும் தனக்கே உரிதான பல்வேறு புதிய வழிகளிலும் வளர்ச்சியைக் கண்டுவருகிறது.
எனவே இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் மென்மேலும் முதலீடுகளை ஈர்க்க பின்வரும் பல்வேறு திட்டங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் வீடுகள்
மத்திய அரசு அண்மையில் பல்வேறு மாநிலங்களில் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க எண்ணி பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் சேவைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுகு வடிவமைப்பு, தகவல் தொழில் நுட்பம் மூலம் பலகோடி டாலர் மதிப்புள்ள வர்த்தக வாய்ப்புக்களை உலகெங்கிலுமிருந்து ஈட்டித் தரும்.
மூத்தோர் குடியிருப்புக்கள்
மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புத் திட்டங்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன என்பது வேதாந்தா மற்றும் ஆஷியானா போன்ற பெரு நிறுவன்ஙகள் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் தெள்ளத் தெளிவாகிறது.
இந்த மூத்தக் குடிமக்களுக்கான குடியிருப்புகள் மருத்துவ வசதிகள், சமையல் மற்றும் துப்புரவு உள்ளிட்ட பல்வேறு நவீன உறுதுனைச் சாதனங்களையும் திட்டங்களையும் கொண்டிருக்கவேண்டும். இது அமெரிக்காவில் நன்கு பிரபலமான ஒன்று என்பதால் அந்த நாட்டைச் சேர்ந்த இத்துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தொடக்க நிலையில் உள்ள இந்தத் துறையில் முதலீடு செய்ய வழிவகுக்கும்.
எளிய விலை வீடுகள் (அஃபோர்டபிள் ஹோம்ஸ்)
மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் நகரத்தில் வாழும் ஏழை மக்களுக்காக பல்வேறு குடியிருப்புத் திட்டங்களை வகுத்தவண்ணம் உள்ளன. அவை நவீன வீடுகள் மற்றும் முன்கூட்டியே கட்டமைக்கப் பட்டு தேவையான இடத்தில் பொருத்தும் சிறு வீடுகள் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை கண்டுபிடித்துள்ளன.
இந்திய அரசின் "அனைவருக்கும் வீடுகள் 2022" திட்டம் இது போன்ற நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அவர்களும் தங்களுடைய நவீன வடிவமைப்பைக் கொண்டு இந்தியாவில் சிறிய மற்றும் எளிய வீடுகளை இந்தியாவில் கட்டமைக்க முடியும்.
பசுமை வீடுகள்
பசுமை வீடுகள் தற்காலத்திய புதிய வீடுவாங்கும் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சுற்றுச்சூழலுக்குப் பொருந்தும் வீடுகளை ஒரு சிறிய சிறப்புத் தொகையை பெறுவதன் மூலம் கட்டுமான நிறுவனங்கள் நிர்மானித்துத் தருகின்றன.
கட்டுமானத் திட்டங்களில் பசுமை மற்றும் சுற்றுச்சூழலில் நன்கு முன்னேறியுள்ள அமெரிக்காவில் இது போன்றத் திட்டங்கள் பிரபலமாக இருக்கின்றன. எனவே பசுமை வீடுகள் திட்டங்கள் அந்த நாட்டு முதலீடுகளை இந்தியாவிற்கு வரவழைக்கும் என நம்பலாம்.
நிதி நகரங்கள் மற்றும் தொழிற் பூங்காக்கள்
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் அதைப் போன்ற திட்டங்கள் கடந்த பத்தாண்டுகளில் நன்கு நடைபெற்றதைக் காண முடிந்தது. இந்தியாவின் மாநில அரசுகள் இதுபோன்ற பல நகரங்களையும் பூங்காக்களையும் திட்டமிட்டு வருகின்றன. குஜராத்தில் உள்ள கிஃப்ட் சிட்டி இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
சென்னை மற்றும் பெங்களூரு
சென்னை மற்றும் பெங்களூரு நகர நிர்வாகங்களும் நிதி நகரங்களையும் தொழிற் பூங்காக்களையும் நிர்மானிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. இவற்றில் ஒரே ஒரு திட்டம் கொண்டுள்ள பல்வேறு வகைகளும் அதற்கான சாத்தியக் கூறுகளும் வெளி நாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்க்கும் என்பது நாம் கணிக்கக் கூடியதே.
மறுமலர்ச்சித் திட்டங்கள்
மத்திய அரசின் எளிய வீடுகளை ஊக்குவிக்கும் குறிக்கோள் குடிசைகளை மறுவளர்ச்சி செய்யும் நோக்கங்களையும் கொண்டுள்ளது. இது போன்ற தனித் தன்மை கொண்ட வாய்ப்புகள் நகரின் முக்கிய இடங்களிலுள்ள பழைய பாழடைந்த வீடுகளைக் கொண்ட இடங்களை கட்டுமான நிறுவனங்கள் எடுத்து அவற்றை புதிய வீட்டு மற்றும் வணிக வளாகங்களாக மாற்றி பழைய வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளைத் தருவதுடன் வணிக நிறுவனங்களுக்கான இடத்தையும் உறுதிசெய்யும்.
இங்கு நிலங்கள் வாங்குவது குதிரைக்கொம்புதான்
இதன் மூலம் பல குடிசைகளைக் கொண்டுள்ள இடங்கள், குறிப்பாக மும்பை போன்ற பெருநகரங்களில் நிலத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ள வொர்லி மற்றும் லோயர் பரெல் ஆகிய இடங்களில் உள்ளன. இது போன்ற இடங்களில், அதிகமான இடவசதி மிகவும் குறைவாக இருப்பதோடு இங்கு நிலங்கள் வாங்குவது குதிரைக்கொம்புதான்.
எனவே அது போன்ற திட்டங்கள் இதில் கிடைக்கும் இலாபத்தின் காரணமாக வெளி நாடுகளிலிருந்து நல்ல முதலீடுகளைப் பெற்றுத்தரும் என நம்பலாம்.
எது எப்படியோ மக்கள் வசதியாகவும் நிம்மதியாகவும் வாழ வழி பிறந்தால் சரி!
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications